கந்தலாகி போன கல்லாறு சாலை : நொந்து நூலாகும் விவசாயிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கந்தலாகி போன கல்லாறு சாலை : நொந்து நூலாகும் விவசாயிகள்

Added : நவ 23, 2021
Share
மேட்டுப்பாளையம்:கல்லாறு பண்ணைக்கு செல்லும் சாலையை, சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை, கல்லாறில் இரு மலைகளுக்கு இடையே, 25 ஏக்கரில், அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு பலவகையான பழ, வாசனை திரவியம் நாற்றுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பண்ணை வளர்ச்சிக்கு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்,
 கந்தலாகி போன கல்லாறு சாலை : நொந்து நூலாகும் விவசாயிகள்

மேட்டுப்பாளையம்:கல்லாறு பண்ணைக்கு செல்லும் சாலையை, சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை, கல்லாறில் இரு மலைகளுக்கு இடையே, 25 ஏக்கரில், அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு பலவகையான பழ, வாசனை திரவியம் நாற்றுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பண்ணை வளர்ச்சிக்கு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சிறுவர் பூங்கா அமைத்துள்ளனர்.ஊட்டி சாலையில் இருந்து, கல்லாறு தோட்டக்கலைத்துறை பண்ணைக்கு செல்லும், ஒரு கி.மீ., சாலை, வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவில் உள்ளது. பண்ணைக்கு நாற்றுகளை வாங்க செல்லும் விவசாயிகள், வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கல்லாறு பண்ணைக்குச் செல்லும் சாலையை, சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X