பொது செய்தி

தமிழ்நாடு

காவல்துறையில் நடக்காததை நடப்பதாக காண்பிப்பதா: ஜெய்பீம் படக்குழுவுக்கு முன்னாள் போலீஸ் அதிகாரி கேள்வி

Updated : நவ 24, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை: ஜெய்பீம் படத்தில் காவல்துறையில் நடக்காததை நடப்பதாக காண்பிப்பதா என ஜெய்பீம் படக்குழுவுக்கு முன்னாள் போலீஸ் அதிகாரி கேள்வி எழுப்பி உள்ளார்.முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி, ஜெய்பீம் பட குழுவிற்கு எழுப்பிய கேள்வி: மேற்கு மண்டலத்தை சேர்ந்த நாங்க, சூர்யா குடும்பத்தின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். அவர் மீது, தனிப்பட்ட முறையில்

சென்னை: ஜெய்பீம் படத்தில் காவல்துறையில் நடக்காததை நடப்பதாக காண்பிப்பதா என ஜெய்பீம் படக்குழுவுக்கு முன்னாள் போலீஸ் அதிகாரி கேள்வி எழுப்பி உள்ளார்.latest tamil newsகாவல் துறைய முடக்க நினைச்சா விபரீதம் ஆயிரும், தம்பி சூர்யா.. கலியமூர்த்தி டிஎஸ்பி (ஓய்வு)

முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி, ஜெய்பீம் பட குழுவிற்கு எழுப்பிய கேள்வி: மேற்கு மண்டலத்தை சேர்ந்த நாங்க, சூர்யா குடும்பத்தின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். அவர் மீது, தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியோ அல்லது வெறுப்போ இல்லை.
உண்மை சம்பவத்தை தழுவிய கதை என்பதில்தான் பிரச்னையே. தவறுகளை சுட்டிக் காட்டுவதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. போலீஸ்துறை மீதான மரியாதையை குலைப்பது போல் சம்பவம் உள்ளது.

ஜெயிலர், கைதிகளை ஜாதி அடிப்படையில் பிரிக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. போலீசுக்கு பணம் கொடுத்து கைதிகளை வாங்குவது போன்ற சம்பவம் காட்டப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் இது வரையில் நடந்தது இல்லை. இச்சம்பவம் போலீஸ் துறை மீது பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து சென்னையில் உள்ள எங்கள் சங்க தலைவர் வேலுசாமியிடம் கலந்து பேசி சூரியாவிற்கு கடிதம் எழுதினேன். பொதுமக்கள் மத்தியில் காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்துகிறது. தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை மீடியாக்கள் சமூக வலை தளங்களுக்கு உண்டு. இல்லாததை எப்படி சொல்கிறார்கள்

காவல்துறை என்பது தன்னை அகழ்ந்தாரை தாங்கும் பூமி . என்னை இகழ்ந்தாலும் , மேடையில் என்னை திட்டிக்கொண்டிருந்தாலும் உங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டே இருப்போம். இதுதான் போலீஸ் டிபார்ட்மென்ட். போலீஸ் துறையின் மொராலிட்டி கெட்டு போயிட்டது என்றால் போலீசின் இமேஜ் ஸ்பாயில் ஆவது மட்டுமல்ல.


latest tamil newsபோலீஸ் என்பது பல ஜாதி உள்ள ஒரு பெரிய அமைப்பு. ஒன்னேகால் லட்சம் போலீசார் பணி செய்துவருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேலாக ஓய்வு பெற்ற போலீசார் உள்ளனர். இவர்கள் எலக்சன் நேரத்தில் பணி செய்து உள்ளனர். உண்மையில் எங்களுக்கு ஒருவருக்கொருவர் என்ன ஜாதி என்பது தெரியாது.
ஆனால், இந்த படத்தின் மூலம் போலீஸ் துறைக்குக்குள் ஜாதி வேறுபாட்டு பிரச்னை வந்து அதனால் அந்த துறை முடக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பும், பொதுமக்களின் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்ற ஒரு காரணத்திற்காகத்தான் தவிர வேறும் எந்த காரணமும் இல்லை. சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மட்டற்ற மரியாதை வைத்துள்ளோம்.

இந்ததுறை முடக்கப்பட கூடாது.இந்த துறை திருத்தப்படலாம், கண்டிக்கப்படலாம். தப்பு செய்தால் தண்டிக்கவும் படலாம். ஆனால் எந்த காரணத்துக்காகவும், யாராலும் இந்த துறை முடக்கப்படக்கூடாது. மொராலிட்டி கெட்டு போய் விட கூடாது அதனால் எழுதினோம்.

கொள்ளை சம்பவம் என்றால் நீங்கள் பார்ப்பது வேறு,நாங்கள் உண்மையை விசாரிக்கும் போது நடப்பது வேறு. ஒவ்வொரு சம்பவத்திற்கும் போகும் போதும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியும். பொதுமக்களுக்கு வேண்டுமானால் புதிதாக தெரியலாம். தவிர எல்லா போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள்,இப்போது இருக்கிற அதிகாரிகளுக்கும் தெரியும்.
அடிப்பது, உடைப்பது,பணம் காசு கொள்ளயைடிப்பது மட்டுமல்ல,கத்திமுனையில் பெண்களை பலாத்காரம் பண்ணியிருப்பது நிறைய நடந்திருக்கிறது. இது குறித்து கடிதத்தில் தெரிவித்து உள்ளேன். அதில், வேகமாக தெரிவிக்க காரணம் அன்றைய தினம் ஆடு திருடியவனை பிடிக்க சென்ற போலீஸ் பூமிநாதன் கொலை செய்யப்பட்டார். அவர் விட்டுட்டு போயிருந்தால் டிபார்ட்மென்ட் கேட்க போவதில்லை. குடும்பத்திற்கு அவர் இருந்திருப்பார். இன்று அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்ள கடமைபட்டுள்ளோம்.
இந்தமாதிரி ஒரு உணர்ச்சி வசப்படக்கூடிய டிபார்ட்மென்ட். நல்லா தெரியும், எங்களுக்கு கைது அப்படிங்கறது மட்டும் இருந்தால் போதுமானது. அதுக்குமேல போக வேண்டியது இல்லை. கைது செய்வதற்கே நிறைய ரெஸ்ட்ரிக்சன் இருக்கு. ஐந்தே காரணம் தான் கைது செய்ய சட்டத்தில் சொல்லி இருக்கிறார்கள். வேற ஒண்ணுமே கிடையாது. 1. குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவது. 2. குற்றவாளிகளின் உண்மையான பெயர் ,முகவரியை தெரிந்து கொள்வது.3. போலீசின் கடமையை ,புலன் விசாரணை செய்யும் போது குற்றவாளி இடையூறாக இருக்க கூடாது. 4. பிடிக்க கூடிய குற்றத்தை செய்யும் போது தடுப்பதற்காக செய்யப்படும் கைது. 5.முப்படைகளில் இருந்து தப்பி வந்தவர்களை டெஸர்ட்டர்களை கைது செய்வது.
இதுக்கும் மேலேயும் போய் திருட்டு போன ஆளுடைய பொருட்களை கண்டுபிடிச்சு கொடுக்கணும். அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பரிகாரம் செய்யனும் என்கிறது.
போலீஸ் உணர்ச்சி வசப்படுவதால் வருவது. இதனால் நிறைய போலீசார் ஜெயிலுக்கு போயிருக்கின்றனர். பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பங்கள் அழிந்து போய் உள்ளது.
சாகிறவனுக்கும் போலீசுக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. அவன்யாரு என்பது அதுக்குமுன்னாடி வரைக்கும் போலீஸ் அதிகாரிக்கு தெரியாது. போலீஸ் அதிகாரி யார் என்பது அந்த குற்றவாளிக்கு தெரியாது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்யனும். பாதுகாப்பு கொடுக்கனும் அடுத்தது நம்ம சரகத்தில் எந்தகெட்டதும் நடந்துர கூடாது. மக்கள் அமைதியாக இருக்கனும்.மக்கள் நல்லபடியாக அமைதியான வாழனும். மக்கள்நல்லபடியா தூங்கனும் . அமைதியான வாழ்க்கை வாழனும் அப்படிங்கிறதுக்காக அந்த சட்டவரையறையை மீறி போய் ஜெயிலுக்கு போவதை அந்தபடத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். அந்த சப்ஜெட்டுக்கு போகவில்லை.

இது வந்து எந்த ஒருஅரசு துறையாக இருந்தாலும் கிரிட்டிசைசுக்கு கட்டுப்பட்ட துறை தான். அதில் குறைபாடே கிடையாது. ஆனால் இல்லாததை சொல்றதுஅல்லது இருப்பதை மறைக்கிறது அந்த படத்தில் இறந்த போன குற்றவாளிகளின் மீது நிறைய கேஸ் இருப்பதாக சொல்கிறார்கள். உண்மை சம்பவத்தை சொல்வதாக இருந்தால் உண்மை சம்பவத்தையே சொல்லிடனும். கொஞ்சம் கதைக்கு சேர்த்துக்கலாம் ,வைத்து கொள்ளலாம் தவிர உண்மையில் இருந்து பிறழ்ந்து மாறுபட்டு எதிர்புறமாக திரும்பு போது மட்டும் தான் இந்த மாதிரியான கிரிட்டிசைஸ் பண்ண வேண்டிய சூழ்நிலை வருகிறது.
அதுவும் இந்த கிரிட்டிசைசும் மக்கள் நன்மைக்காகத்தான். எங்கள் போலீஸ் டிபார்ட்மென்ட் டீமாரலைஸ் ஆகி விடக்கூடாது. இதனுடைய கட்டுப்பாடு குலைந்து விடக்கூடாது. எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் பொதுமக்களுக்கு நன்மைசெய்யனும் என்ற ஒற்றுமை குலைஞ்சுடக்கூடாது என்பதற்கு மட்டும் தான் இந்த ரைட்டப். இது சூர்யாவிற்கு எதிரான கருத்து அல்ல.மற்றவர்களும் இது மாதிரி பண்ணிவிடக்கூடாது என்பதற்காக சொல்லி இருக்கிறோம். அந்த ஒரு சம்பவம் படத்தில் இருந்து நீக்கப்பட்டால் நாங்கள் நன்றி உடையவர்களாக இருப்போம். இப்ப கூட எத்தனையோ பிரச்னைகளுக்கு இடையில் அவரது வீட்டிற்கு காவலுக்கு நிற்பது போலீஸ்காரர்கள் தான். நாளைக்கு அவர் வெளியில் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பது இதே போலீஸ்தான். அவரது படத்தை தியேட்டரில் போட்டாலும் அதுக்கும் பாதுகாப்பு கொடுப்பது போலீஸ்தான்.
எங்களை நீங்கள் திட்டினாலும்,எங்களை நீங்கள் அடிச்சாலும்,எங்களை நீங்கள் மிதிச்சாலும் பாதுகாப்பு கொடுப்போம் தயவு செய்து எங்களை புரிந்து கொள்ளுங்கள். இது மட்டுமே எங்களது வேண்டுகோள்.தப்புசெய்தால் எந்த போலீசாக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். பாலியல் குற்றம் என்பது கடுமையான குற்றம் .இதை புகார் எடுக்க மாட்டேன் என்று சொன்னால் அந்த போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்வதில் தப்பே கிடையாது. இவ்வாறு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durairaj - Kuwait,குவைத்
24-நவ-202118:46:37 IST Report Abuse
Durairaj We can't justify Satankulam case. First of all why they are not still terminated from their service. let them face the charges as ordinary citizens. Nowhere in the earth this type of brutality allowed
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
24-நவ-202113:28:39 IST Report Abuse
M  Ramachandran சூர்யா திருந்தாதா ஜென்மம். வன்மம் காட்டும் மானிடன். காழ்ப்புணர்ச்சி பொஙக யாரை கை காட்டுவது என்று தெரியாமல் வெறும் வாய் மீள்கிறார். அடிபட்ட பூனையை இந்த அரசியல் ஆர்வம் (உறுமல்) கடந்த தேர்தலிலிருந்து தான் ஆரம்பித்துள்ளது. அவரை அவரை சார்ந்த சொந்தங்கள் அடிபட்டு வலிதாங்காமல் இப்போ வஞ்சம் தீர்ப்பதாக எண்ணி ஊடகங்கள் மூலமும் தான் எடுக்கு படங்கள் மூலமும் தீயய்ய் கக்கிக்கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-202112:55:19 IST Report Abuse
rajan உதயகுமார் மாணவன் இறந்த சம்பவத்தை வைத்து படம் தயாரிக்க ஒரு குழு காத்திருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X