பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிப்பு

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (7+ 14)
Share
Advertisement
புதுடில்லி :சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதையடுத்து, அதை கட்டுப்படுத்துவதற்காக, இருப்பாக வைக்கப்பட்டுள்ளவற்றில் இருந்து, 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கோரிக்கை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக, உற்பத்தியை அதிகரிக்கும்படி, பெட்ரோலியம்
பெட்ரோல், டீசல் விலை, தடுக்க 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிப்பு

புதுடில்லி :சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதையடுத்து, அதை கட்டுப்படுத்துவதற்காக, இருப்பாக வைக்கப்பட்டுள்ளவற்றில் இருந்து, 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


கோரிக்கை


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக, உற்பத்தியை அதிகரிக்கும்படி, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் 'ஓபெக்'அமைப்பிடம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.
ஆனால், இதை ஏற்க ஓபெக் மற்றும் அதன் நட்பு நாடுகள் மறுத்துவிட்டன.இதையடுத்து விலையை குறைப்பதற்கு ஏதுவாக, தங்களிடம் இருப்பில் உள்ள கச்சா எண்ணெயை விடுவிக்கும்படி, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது.
இந்தியாவும், அதிகளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


latest tamil news



நாட்டில், முதல்முறையாக, அவசர கால தேவைக்காக கையிருப்பில் வைத்துள்ள கச்சா எண்ணெயில் இருந்து, 50 லட்சம் பீப்பாய்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில், மூன்று இடங்களில் நிலத்திற்கு கீழே 3.8 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளது.
விடுவிக்கப்படும்அதிலிருந்து, 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய், அடுத்த 10 நாட்களுக்குள் விடுவிக்கப்படும். இவை, இருப்பு வைக்கப்பட்ட இடத்தில் இருந்து பைப் வாயிலாக இணைக்கப்பட்டுள்ள, மங்களூரு சுத்தி கரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரடியாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
24-நவ-202114:11:49 IST Report Abuse
pradeesh parthasarathy நாட்டின் சேமிப்பு ... மன்மோகன் ஆட்சியில் .... அதையும் காலியாகி விட்டுவிட்டு வெறுங்கையோடு நிற்கபோகும் அரசு .... திடீர்னு யுத்தம் வந்தா என்னடா செய்வீங்க ....
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
24-நவ-202107:26:28 IST Report Abuse
J.Isaac இடைதேர்தல் முடிவு எவ்வளவு வேலை செய்கிறது 3.8 கோடி பீப்பாய் கடலுக்கு அடியில் பதுக்கலா? இத அம்பானி கணக்குகையும் சேர்த்தா?
Rate this:
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
24-நவ-202112:23:11 IST Report Abuse
Dinesh Pandianஇடை தேர்தலுக்கும் கச்சா எண்ணை விலைக்கும் என்ன சம்மந்தம் ? அமெரிக்கா சீனா ஜப்பான் நாடுகள் இதை செய்வதால் நாமும் செய்றோம்...
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
24-நவ-202113:22:08 IST Report Abuse
தமிழன்சரி ஐசக்கு, அப்பிடியே வச்சுக்கோ, இதுக்கு முன்னாடி காங்கிரஸ் ஆட்சில செய்யாததா? இல்ல அந்த நேரத்துல அம்பானி கணக்கு வச்சிக்கல்லயா? மோதி பீதில கூவிகிட்டு.. போவியா....
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
24-நவ-202106:52:10 IST Report Abuse
P Sundaramurthy மாநில சட்டசபை தேர்தல் கண்ணில் தெரிகிறது . மக்களே மஞ்சள் தண்ணி ஊத்தறது அழுகுப்பார்க்க அல்ல . இப்போ திருந்து தேர்தல் முடியும் வரை நடக்கும் மக்கள் நல திட்டங்களை வரவு வைக்காதீர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X