பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தலைவர் வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்க பா.ஜ., தலைவர் ஜே.பி. நட்டா இன்று வருவதையொட்டி, இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில், 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.திருப்பூரில், இன்று பா.ஜ., அலுவலகம் திறப்பு, மாநில பொதுக்குழு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திருப்பூர் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு மதியம், 12:00

திருப்பூர்:மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்க பா.ஜ., தலைவர் ஜே.பி. நட்டா இன்று வருவதையொட்டி, இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில், 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.திருப்பூரில், இன்று பா.ஜ., அலுவலகம் திறப்பு, மாநில பொதுக்குழு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திருப்பூர் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு மதியம், 12:00 மணிக்கு வருகிறார். அவருடன் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.பா.ஜ., தேசிய தலைவர் வருகையையொட்டி, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி ஆகியோர் தலைமையில், ஆறு உதவி கமிஷனர்கள், எட்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர, உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X