பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் எப்ப வருவார்... பிரச்னை எப்போது தீரும்? மின் வெட்டால் அவதிப்படும் தொழில் துறையினர்

Added : நவ 23, 2021
Share
Advertisement
பல்லடம்:கரடிவாவியில் ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சியில், கரடிவாவி, கரடிவாவி புதூர், இந்திரா நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட குக்கிராமங்களை சார்ந்து, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.விவசாயம், விசைத்தறி, சைசிங், ஸ்பின்னிங் உள் ளிட்ட
 அமைச்சர் எப்ப வருவார்... பிரச்னை எப்போது தீரும்? மின் வெட்டால் அவதிப்படும் தொழில் துறையினர்

பல்லடம்:கரடிவாவியில் ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சியில், கரடிவாவி, கரடிவாவி புதூர், இந்திரா நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட குக்கிராமங்களை சார்ந்து, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.விவசாயம், விசைத்தறி, சைசிங், ஸ்பின்னிங் உள் ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. சமீப காலமாக ஏற்பட்டு வரும் ஓயாத மின்வெட்டு பிரச்னை, தொழில் துறையினரை கவ லையடைய செய்துள்ளது.இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:காரணம்பேட்டை துணை மின் நிலையத்துடன் இருந்த மின் இணைப்புகள், கரடிவாவி துணை மின் நிலையத்துக்கு மாற்றப்பட்டது முதல், அதிக மின்வெட்டு பிரச்னைகளை ஏற்பட்டு வருகிறது. குறைவான மின் அழுத்தம், அடிக்கடி மின்வெட்டு என, அன்றாடம் எழும் பிரச்னைகள் குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பயனில்லை.டீசல் விலை உயர்வால் ஜெனரேட்டர் பயன்படுத்தியும் தொழில் செய்ய இயலாது. மின்வெட்டு பிரச்னையை கருத்தில் கொண்டு, கே. அய்யம்பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.அதிகாரிகளிடம் கேட்டால், திறப்பு விழா தொடர்பாக, அமைச்சர் வருகைக்கு காத்திருப்பதாக கூறுகின்றனர். அமைச்சர் எப்போது வருவது? பிரச்னை எப்போது தீருவதும்? என அன்றாடம் காத்திருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X