பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... 4 பொது பெட்டி இணைப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம், ஒன்பது ரயில்களில் முன்பதிவில்லா பொது பெட்டிகளை இணைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மங்களூரு - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ஆறு முன்பதிவில்லா பொது பெட்டி இணைக்கப்படும். சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயிலில் நான்கு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படும். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,'எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும், 25ம் தேதி முதல் முன்பதிவில்லா

தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம், ஒன்பது ரயில்களில் முன்பதிவில்லா பொது பெட்டிகளை இணைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மங்களூரு - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ஆறு முன்பதிவில்லா பொது பெட்டி இணைக்கப்படும். சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயிலில் நான்கு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படும். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,'எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும், 25ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படும். ரயில்வே ஸ்டேஷன் கவுன்டரில் 'ஓபன் டிக்கெட்' வாங்கி, பயணத்தை தொடரலாம்,' என்றனர்.

மல்லிகைப்பூ விலை சரிவு

கார்த்திகை மாதம் துவங்கியது முதல் பூக்கள் விலை குறைய துவங்கியுள்ளது. கடந்த வாரம், 1,500 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ கிலோ, 320 ரூபாய்க்கு விற்றது. முல்லை - 280, அரளி கிலோ, 220 ரூபாயாக இருந்தது. பூ வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டுக்கு பூ வரத்து, 250 முதல், 350 கிலோவாக இருந்தது. தொடர் மழை காரணமாக சற்று அதிகரித்துள்ளது. விசேஷங்கள் நிறைவடைந்துள்ளதால், வாங்கி செல்ல பலரும் ஆர்வம் காட்டவில்லை. ஒரு மாதத்துக்கு பின் விலை குறைந்து கிலோ, 320 ரூபாய்க்கு விற்றது,' என்றனர்.
நடத்துனர் செலுத்த அறிவுறுத்தல்
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அரசு பஸ்களில் 'பாஸ்ட்ராக் ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளது. சில நேரங்களில் பஸ்களில் ஓட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் சர்வர் பிரச்னையால், ஸ்கேன் ஆவதில்லை. பஸ்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இச்சூழலை சமாளிக்க, நடத்துனர்கள் நேரடியாக சுங்ககட்டணம் செலுத்த வேண்டும். பஸ் தடம் எண், எந்த சுங்கச் சாவடி, நேரம் ஆகிய விபரத்தை குறிப்பிட்டு, கிளை மேலாளரிடம் செலுத்திய தொகையை பெற்று கொள்ளலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது. காங்கயம் கரூர் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடந்தது. இதில், காங்கயம், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஆறு விவசாயிகள், 2,500 கிலோ தேங்காய் பருப்பினை கொண்டு வந்தனர். தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.105.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.95.35 க்கும் ஏலம் போனது. ஏலத்தில், 2 லட்சத்து, 49 ஆயிரத்து, 998 ரூபாய்க்கு விற்பனையானது.

கலைக்குழுவுக்கு பயிற்சி
ஊரடங்கால், ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், பள்ளி கல்வித் துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான தன்னார்வலர்கள் இணைக்க, திருப்பூரில், 13 ஒன்றியங்கள் முறையே, 9 உறுப்பினர்கள் வீதம், 117 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மூன்று நாள் உண்டு உறைவிட பயிற்சி முகாம், அருள்புரம் ஜெயந்தி கல்வியியல் கல்லுாரியில் துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மபிரபு இதற்கான ஏற்பாடுகள் செய்தார்.
கால்நடை வரத்து குறைவு
மழை காரணமாக தீவனப்பிரச்னை தீர்வு காணப்பட்டதால், விவசாயிகள் பலரும் கன்றுகுட்டி, மாடுகளை சந்தைக்கு கொண்டு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால், ஆயிரம் கால்நடைகள் வந்துகொண்டிருந்த திருப்பூர் கோவில்வழி மாட்டுச்சந்தைக்கு, 700 மாடுகள் மட்டுமே வருகிறது. மாடு வரத்து குறைந்த நிலையில், வியாபாரிகள், விவசாயிகள் வருகையும் சரிந்துள்ளதால், வந்த மாடுகளுக்கும் விலையில்லாத சூழல் ஏற்பட்டது. முதல் ரக மாடு, 30 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி, 8,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
சிற்றிதழ் வெளியீட்டு விழா
திருப்பூர், மங்கலம் ரோடு, மக்கள் மாமன்ற நுாலகத்தில், 'மாமன்றம்' சிற்றிதழ் வெளியீட்டு விழா நடந்தது. திருவள்ளுவர் திருக்கோவில் உலா திருக்குறள் இயக்க மாவட்ட செயலாளர் வின்சென்ட் ராஜ் தலைமை வகித்தார். மக்கள் மாமன்ற நிறுவனர் சுப்ரமணியம் முன்னுரை வழங்கினார். 'மாமன்றம்' எனும் சிற்றிதழை கவிஞர் அருணாச்சலம் வெளியிட அகவை முதிர்ந்த தமிழறிஞரும் திருப்பூர் வரலாற்று ஆய்வாளருமான சிவதாசன் பெற்றுக்கொண்டார். ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன், கவிஞர் ஆழ்வை கண்ணன், முத்துபாரதி குமார், சத்ருக்கன், ராஜா, குமாரசாமி உட்பட பலர்.

வளர்ச்சி பணி துவக்கம்
திருப்பூர் ஒன்றியம், மேற்குபதி ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைத்தல் உட்பட 6.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை, ஆகிய பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், எம்.எல்.ஏ விஜயகுமார் பங்கேற்று கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சொர்ணாம்பாள், மாவட்ட கவுன்சிலர் வேல்குமார், ஊராட்சி தலைவர் ரேசிஸ், பி.டி.ஓ.,கள் விஜயகுமார், மீனாட்சி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.கருப்பட்டி
ஏல வர்த்தகம்
திருப்பூர் அருகே குன்னத்துார் கூட்டுறவு சங்கத்தில் நேற்று கருப்பட்டி ஏலம் விடப்பட்டது. தென்னங்கருப்பட்டி கிலோ 80 ரூபாய் பத்து பைசா வீதம் 3 டன், 2 லட்சத்து 64 ஆயிரத்து 600 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. தற்போது பனங்கருப்பட்டி உற்பத்தி இல்லாததால் அதன் வரத்து இல்லை. ஏலத்தை, கருப்பட்டி கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், தலைவர் பொன்னுசாமி ஆகியோர் நடத்தினர். ஏலத்தில், குன்னத்துார் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
மாணவருக்கு விழிப்புணர்வு
காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் நஜீம் ஜான் தலைமை வகித்தார். பேராசிரியை கவிதா வரவேற்றார். சாலைகளில் விபத்து ஏற்படும் சமயங்களில் விபத்துக்குள்ளானவருக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் மூச்சுப்பயிற்சி அளிப்பதும் குறித்தும் சென்னை ஏகம் அறக்கட்டளை நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் பேசினார். மாணவ, மாணவியர் தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பிரகாஷ் செய்திருந்தார்.
விவசாயிகள் குறைகேட்பு
திருப்பூர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், 26 ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், அனைத்துத்துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X