அடர் வனம் போல் மாறிய கீழமாவிலங்கை சாலை; 108 ஆம்புலன்ஸ் வர தயக்கம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பெருநாழி : பெருநாழி அருகே கீழமாவிலங்கை செல்லும் சாலை சேதமடைந்துள்ளதாலும், சாலையின் இருபுறங்களிலும் முட்செடிகள்வளர்ந்துள்ளதாலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை.கீழமாவிலங்கை சாலையை மேலமாவிலங்கை, கரிசல்குளம், சிறுக்குளம், வீரமச்சன்பட்டி கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது. மாணவர்கள்

பெருநாழி : பெருநாழி அருகே கீழமாவிலங்கை செல்லும் சாலை சேதமடைந்துள்ளதாலும், சாலையின் இருபுறங்களிலும் முட்செடிகள்வளர்ந்துள்ளதாலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை.

கீழமாவிலங்கை சாலையை மேலமாவிலங்கை, கரிசல்குளம், சிறுக்குளம், வீரமச்சன்பட்டி கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது. மாணவர்கள் பம்மனேந்தல், பெருநாழி, கமுதி செல்வதற்கு இச்சாலையை பயன்படுத்துகின்றனர். 2010ம் ஆண்டு அமைக்கப்பட்ட தார்ச்சாலை 5 கி.மீ., தொலைவிற்கு போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.கீழமாவிலங்கை ஊராட்சித் தலைவர் பொன்னுச்சாமி கூறுகை யில், சேதமடைந்த சாலை யால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை அவசரத்திற்கு அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் வர மறுக்கின்றனர். இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் பயனில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், குறைகளை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X