பொது செய்தி

தமிழ்நாடு

ரங்கராட்டினம் ஆட வைக்கும் ரங்கா நகர் செல்லும் சாலை!

Added : நவ 24, 2021
Share
Advertisement
அவிநாசி:சின்னேரிபாளையம் ஊராட்சி, ரங்கா நகர் மக்கள், சாலை வசதியின்றி அல்லல்படுகின்றனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட ரங்கா நகரில், 700 வீடுகள் உள்ளன. கடந்த, 1993ல், பழங்கரை ஊராட்சி மற்றும் சின்னேரிபாளையம் ஊராட்சியை இணைத்து, 'ரங்கா நகர்' என்ற குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது.இங்குள்ள குடியிருப்பு களில் வசிப்போர், அவிநாசி மற்றும் நியூ
 ரங்கராட்டினம் ஆட வைக்கும் ரங்கா நகர் செல்லும் சாலை!

அவிநாசி:சின்னேரிபாளையம் ஊராட்சி, ரங்கா நகர் மக்கள், சாலை வசதியின்றி அல்லல்படுகின்றனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட ரங்கா நகரில், 700 வீடுகள் உள்ளன. கடந்த, 1993ல், பழங்கரை ஊராட்சி மற்றும் சின்னேரிபாளையம் ஊராட்சியை இணைத்து, 'ரங்கா நகர்' என்ற குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது.இங்குள்ள குடியிருப்பு களில் வசிப்போர், அவிநாசி மற்றும் நியூ திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். இக்குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து சாலையும், தற்போது வரை மண் சாலையாகவே உள்ளன. தற்போது பெய்த மழையால், இந்த மண் பாதை அரித்து செல்லப்பட்டு, பயன்படுத்த முடியாக நிலையில் உள்ளது.இதனால், பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், முதியவர்கள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மண் சாலையை தார் சாலையாக மாற்றிட நிதி ஒதுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, நேற்று முன்தினம், திருப்பூர் வந்த முதல்வர் ஸ்டாலினிடம், சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், மனு வழங்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X