பொது செய்தி

தமிழ்நாடு

பாழடைந்த கட்டடங்கள்; பேரூராட்சி எச்சரிக்கை

Added : நவ 24, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி பேரூராட்சி பகுதியில், பாழடைந்த நிலையில் உள்ள பல பழைய கட்டடங்கள், மழைக்காலங்களில் இடிந்து விழுகின்றன.அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்த மழையில், அவிநாசி கஸ்துாரிபா வீதி, அண்ணா வீதி உள்ளிட்ட இடங்களில், பயனற்று பாழடைந்த நிலையில் இருக்கும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மண் சுவற்றால் கட்டப்பட்டுள்ள அந்த கட்டடங்கள், மழைநீரில் ஊறி,
 பாழடைந்த கட்டடங்கள்; பேரூராட்சி எச்சரிக்கை

அவிநாசி:அவிநாசி பேரூராட்சி பகுதியில், பாழடைந்த நிலையில் உள்ள பல பழைய கட்டடங்கள், மழைக்காலங்களில் இடிந்து விழுகின்றன.அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்த மழையில், அவிநாசி கஸ்துாரிபா வீதி, அண்ணா வீதி உள்ளிட்ட இடங்களில், பயனற்று பாழடைந்த நிலையில் இருக்கும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மண் சுவற்றால் கட்டப்பட்டுள்ள அந்த கட்டடங்கள், மழைநீரில் ஊறி, ஸ்திரத்தன்மை இழந்து, எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது.இதனால், அக்கட்டடங்களின் சுவர் இடிந்து விழும் போது, அக்கம் பக்கம் வசிப்போர், அருகில் நிறுத்தப்பட்டுள்ள டுவீலர் உள்ளிட்ட உடமைகள் சேதமடைகின்றன. 'மழை நீடிக்கும்' என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், பேரிடர் தவிர்ப்பு நடவடிக்கையில் கவனமாக இருக்குமாறு, அரசு அறிவுறுத்தியுள்ளது.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பேரூராட்சிக்குட்பட்ட பல இடங்களில், இதுபோன்ற பாழடைந்த கட்டடங்கள் அதிகம் உள்ளன. அவை சொத்து பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால், பயனற்று கிடக்கின்றன.மழைக்கு இடிந்து விழும் கட்டடங்களை உரிமை கொண்டாட கூட, யாரும் முன்வருவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் அத்தகைய கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X