பொது செய்தி

தமிழ்நாடு

முதல் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கும் முன் பி.ஏ.பி., வாய்க்கால் துார்வார வேண்டும்!

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்;பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும்முன், பல்லடம் விரிவாக்க பகுதியில் உள்ள வாய்க்கால்களை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெகநாதன் தலைமை வகித்தார். விவசாயிகள், பல்வேறு கோரிக்கையை முன்வைத்தனர். விவசாயிகள்
 முதல் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கும் முன் பி.ஏ.பி., வாய்க்கால் துார்வார வேண்டும்!

திருப்பூர்;பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும்முன், பல்லடம் விரிவாக்க பகுதியில் உள்ள வாய்க்கால்களை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெகநாதன் தலைமை வகித்தார். விவசாயிகள், பல்வேறு கோரிக்கையை முன்வைத்தனர். விவசாயிகள் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க செயலாளர் சாமிநாதன்: பத்திரப்பதிவுத்துறையின் அலட்சிய போக்கால், எனது பொதுக்கிணறு, வாய்க்கால் ஆகியவற்றை, மற்றவர்கள் விற்றுள்ளனர். வஞ்சிபாளையம் சுற்றுப்பகுதியில் சாயக்கழிவு வெளியேற்றத்தால், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பொன்னுசாமி: பி.ஏ.பி., பாசனத்துக்காக, விரைவில் முதல் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, பல்லடம் விரிவாக்க பகுதியில் உள்ள வாய்க்கால்களை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். ஆண்டிபாளையம் குளம் அருகே, மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மழைநீரில் அடிக்கடி மூழ்கிவிடுகிறது. நிரந்தர தீர்வு காண வேண்டும். விவசாயி கிருஷ்ணசாமி: நஞ்சராயன் குளம் அருகே, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, 8.90 ஏக்கர் நிலத்தை, தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்து, அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி அப்புசாமி: பொங்குபாளையம் பகுதியில் உள்ள குளம், யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதனால்,குளத்தை துார்வாரி சுத்தம் செய்ய இயலவில்லை.மரங்களை அகற்றி, குளத்தை ஆழமாக துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். விடுப்பட்ட குளம், குட்டைகளை, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இணைக்க வேண்டும்.இழப்பீடு வழங்க வேண்டும்!பி.ஏ.பி., திட்ட விரிவாக்கத்துக்காக, 1982ல், பல்லடம் சுற்றுப்பகுதி விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சில விவசாயிகளுக்கு இதுவரை அதற்கான இழப்பீடு கிடைக்கவில்லை. நேற்றைய கூட்டத்தில் இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் சிலர் முறையிட்டனர்.தற்போது, சென்ட் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்கிறது. இரண்டு முதல், நான்கு ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளோம். இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. பி.ஏ.பி., திட்ட அதிகாரிகள், விடுபட்ட அனைவருக்கும் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X