பொது செய்தி

தமிழ்நாடு

நூல் விலை உயர்வு: காடா துணி உற்பத்தி முடக்கம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பல்லடம்:நுால் விலை உயர்வால், காடா துணி உற்பத்தி தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:சமீப நாட்களாக, நுால் விலை ஏற்றமடைந்து வருகிறது. அக்., மாதத்தில் இருந்தது, 30 முதல் 120 ரூபாய் வரை நுால் விலை உயர்ந்துள்ளது. பஞ்சு விலையும் அபரிமிதமாக

பல்லடம்:நுால் விலை உயர்வால், காடா துணி உற்பத்தி தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:சமீப நாட்களாக, நுால் விலை ஏற்றமடைந்து வருகிறது. அக்., மாதத்தில் இருந்தது, 30 முதல் 120 ரூபாய் வரை நுால் விலை உயர்ந்துள்ளது. பஞ்சு விலையும் அபரிமிதமாக அதிகரித்ததே இதற்கு காரணம். நுால் ஏற்றுமதியும், பதுக்கலுமே விலை உயர்வுக்கு காரணம்.உள்நாட்டு தேவை போக ஏற்றுமதி செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே, ஏராளமான தறிகள் நின்றன. பண்டிகைக்கு பின், நுால் விலை மேலும் அதிகரித்துள்ளதால், தொழிலை நடத்தலாமா? வேண்டாமா என, பலரும் யோசித்து வருகின்றனர்.மூன்றில் ஒரு பங்கு தறிகள் இயங்காமல் உள்ளன. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, நுால் விலைக்கு ஏற்ப துணி விலையை உயர்த்தியாக வேண்டும். துணி விலை உயர்வால், வியாபாரிகள் துணிகளை வாங்க மறுக்கின்றனர். இரண்டு மாதத்தில், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள துணிகள் தேக்கமடைந்துள்ளன.நுால் விலை உயர்வால், இத்தொழில் சார்ந்த உப தொழில்கள் மட்டுமன்றி, தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.துணி விலை உயர்வால், வியாபாரிகள் துணிகளை வாங்க மறுக்கின்றனர். இரண்டு மாதத்தில், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள துணிகள் தேக்கமடைந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X