பொது செய்தி

தமிழ்நாடு

பெண் காவலருக்கு வளைகாப்பு; யானைக்கவுனியில் நெகிழ்ச்சி

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
யானைக்கவுனி : யானைக்கவுனி காவல் நிலையத்தில் நிறை மாத கர்ப்பிணியான காவலருக்கு சக காவலர்கள் வளைகாப்பு விழா நடத்தினர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை, கொண்டிதோப்பைச் சேர்ந்தவர் ஜெயேந்திரன், 27; எலக்ட்ரீஷின். இவரது மனைவி விஷ்ணு பிரியா, 24. இவர், சென்னை யானைக்கவுனி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது, அவர் நிறைமாத கர்ப்பிணியாக
பெண் காவலர், வளைகாப்பு, யானைக்கவுனி

யானைக்கவுனி : யானைக்கவுனி காவல் நிலையத்தில் நிறை மாத கர்ப்பிணியான காவலருக்கு சக காவலர்கள் வளைகாப்பு விழா நடத்தினர்.

இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை, கொண்டிதோப்பைச் சேர்ந்தவர் ஜெயேந்திரன், 27; எலக்ட்ரீஷின். இவரது மனைவி விஷ்ணு பிரியா, 24. இவர், சென்னை யானைக்கவுனி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது, அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி யானைக்கவுனி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

யானைகவுனி காவல் ஆய்வாளர் வீரகுமார் தலைமையில், அனைத்து காவலர்கள், காவலர்களின் குடும்பத்தினர், ஆகியோர் பங்கேற்று, விஷ்ணு பிரியாவுக்கு வளையல் அணிவித்தும், தம்பதிக்கு சந்தனம் பூசியும், நெற்றியில் திலகமிட்டும், 15 தட்டுகள் வைத்து சீர் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது குறித்து யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் வீரகுமார் கூறியதாவது: எங்கள் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரையும், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல நினைக்கிறோம். எனவே தான், காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் விஷ்ணு பிரியாவுக்கு, இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
24-நவ-202110:41:40 IST Report Abuse
R. Vidya Sagar நிதியமைச்சர் வந்தாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X