வேலைவாய்ப்பு தகவல் வெப்சைட் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு தகவல் 'வெப்சைட்' துவக்கம்

Added : நவ 24, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல்களை தெரிவிக்கும், நுாலகத் துறையின் இணையதளத்தை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.பொது நுாலகங்களில் பணியாற்றும், 33 நுாலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் நடந்தது. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்று, நுாலகர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், 'தமிழக
 வேலைவாய்ப்பு தகவல்   'வெப்சைட்' துவக்கம்

சென்னை:பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல்களை தெரிவிக்கும், நுாலகத் துறையின் இணையதளத்தை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.
பொது நுாலகங்களில் பணியாற்றும், 33 நுாலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் நடந்தது. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்று, நுாலகர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், 'தமிழக எம்ப்ளாய்மென்ட் நியூஸ்' என்ற செயலியையும், www.tnemployment.in இணையதளத்தையும், அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். மேலும், www.tamilnadupubliclibraries.org என்ற நுாலகத்துறை இணையதளமும் துவக்கப்பட்டது.

இந்த இணையதளத்தில் 19 ஆயிரத்து, 684 புத்தகங்கள் மற்றும் 2.54 லட்சம் ஓலைச்சுவடிகள், டிஜிட்டல் வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை, பொதுமக்கள் இலவசமாக படிக்கலாம். பள்ளி கல்வி செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், இயக்குனர் கண்ணப்பன், பள்ளி கல்வி இணை செயலர் சரண்யா, இணை இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X