பொது செய்தி

தமிழ்நாடு

'பபாசி'க்கு 26ல் தேர்தல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி'க்கு, நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி'யில், 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் தொடர்ந்து சந்தா செலுத்துவோர் மட்டும், இரண்டாண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில் ஓட்டு போட்டு, தலைவர், செயலர், பொருளாளர்

சென்னை:தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி'க்கு, நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி'யில், 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் தொடர்ந்து சந்தா செலுத்துவோர் மட்டும், இரண்டாண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில் ஓட்டு போட்டு, தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட, 16 பதவிகளுக்கான நபர்களை தேர்ந்தெடுப்பர்.
அந்த வகையில், தற்போது பதவியில் உள்ளோருக்கு, இந்த மாதத்துடன் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், நாளை மறுநாள், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில், நிரந்தர புத்தக காட்சிக்கான, நான்கு நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X