பரமக்குடியில் காட்டுநாயக்கர் குடியிருப்பை சூழ்ந்த நீர்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி பகுதியில் வாழும் காட்டு நாயக்கர் குடியிருப்பை கால்வாய் நீர் சூழ்ந்துஉள்ளது.பரமக்குடி 28 வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரை ஒட்டிய பகுதியில் காட்டு நாயக்கர் குடியிருப்பு உள்ளது. 20 குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் வாழ்கின்றனர்.இவர்கள் வசிக்கும் இடம் பரமக்குடி நகராட்சி மற்றும் வேந்தோணி ஊராட்சி எல்லைக்குட்பட்ட இடம் என

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி பகுதியில் வாழும் காட்டு நாயக்கர் குடியிருப்பை கால்வாய் நீர் சூழ்ந்துஉள்ளது.

பரமக்குடி 28 வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரை ஒட்டிய பகுதியில் காட்டு நாயக்கர் குடியிருப்பு உள்ளது. 20 குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் வாழ்கின்றனர்.இவர்கள் வசிக்கும் இடம் பரமக்குடி நகராட்சி மற்றும் வேந்தோணி ஊராட்சி எல்லைக்குட்பட்ட இடம் என இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. குடியிருப்பையொட்டி வேந்தோணி கால்வாய் உள்ளது.தற்போது கால்வாயில்வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் செல்கிறது.

இந்த நீரானது குடியிருப்பை சூழ்ந்துள்ளது.ரோடு, தெரு விளக்கு, குடிநீர் என அடிப்படை வசதிகள் செய்யப்படாத குடியிருப்பில், குழந்தைகள், முதியவர்கள் தண்ணீருக்கு மத்தியில் சிரமத்திற்கு இடையே வாழும் நிலை உள்ளது.இவர்களின் நிலை குறித்து 'தினமலர்' நாளிதழ்சுட்டிக் காட்டி வரும் நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் உண்டு, உறைவிடப்பள்ளி துவக்கப்பட்டு, அதே வேகத்தில் அதிகாரிகளின் செயல்பாடு இன்றி மூடு விழா கண்டது.

பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், தாசில்தார் தமிம்ராஜா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அய்யனார் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டனர். தொடர்ந்து வரும் நாட்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.பரமக்குடி நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் குடியிருப்பில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X