கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோழி பண்ணை நடத்தி மோசடி இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை:நாட்டுக்கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றிய இருவருக்கு, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, நம்பியூரில் 2012ல் 'ஹெல்த்தி பவுல்ட்ரி பார்ம்ஸ்' என்ற நாட்டுக் கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த பண்ணையை பிரபு, 22; கார்த்திகா, 24, அவரது கணவர் மணிகண்டன், 27 மற்றும் ஐந்து பேர் நடத்தினர்.இவர்கள், 1 லட்சம் ரூபாய்

கோவை:நாட்டுக்கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றிய இருவருக்கு, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, நம்பியூரில் 2012ல் 'ஹெல்த்தி பவுல்ட்ரி பார்ம்ஸ்' என்ற நாட்டுக் கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த பண்ணையை பிரபு, 22; கார்த்திகா, 24, அவரது கணவர் மணிகண்டன், 27 மற்றும் ஐந்து பேர் நடத்தினர்.இவர்கள், 1 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தால், ஒரு கொட்டகை அமைத்து கொடுத்து 500 நாட்டுக்கோழி குஞ்சு தருவதாகவும், தீவனம், மருந்து தருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பராமரிப்பு தொகையாக மாதம் 8,500 ரூபாய் தருவதாகவும், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகை தருவதாகவும் கூறி வசூலித்தனர்.ஆனால், அறிவித்தபடி எதையும் செய்யாமல் மோசடி செய்தனர். முதலீட்டாளர்களிடம் வசூலித்த 1.55 கோடி ரூபாயுடன் எட்டு பேரும் தலைமறைவாகினர்.
இவர்கள் மீதான வழக்கை விசாரித்த, கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, குற்றஞ் சாட்டப்பட்ட கார்த்திகா, பிரபு ஆகிய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 1.65 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற ஆறு பேர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X