கழிவுநீர் குட்டையான ஞானாநந்தகிரி நகர்

Added : நவ 24, 2021
Share
Advertisement
தேவகோட்டை : தேவகோட்டையில் வளர்ச்சி அடைந்த பகுதிகளுள் ஒன்று ஞானாநந்தகிரி நகர். பிரதான ரோடு இரண்டு , குறுக்கு சாலைகள் எட்டு உள்ளன. அனைத்து ரோடுகளிலுமே கழிவு நீர் மற்றும் மழைநீர் குட்டைகளாக தேங்கி உள்ளது. தண்ணீர் குட்டை இல்லாத வீதியே கிடையாது. நெடுஞ்சாலை துறை ரோட்டையும், நகரில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் ரோட்டையும் இணைக்கும் பிரதான சாலையில் 6 கழிவு நீர்குட்டைகள்

தேவகோட்டை : தேவகோட்டையில் வளர்ச்சி அடைந்த பகுதிகளுள் ஒன்று ஞானாநந்தகிரி நகர். பிரதான ரோடு இரண்டு , குறுக்கு சாலைகள் எட்டு உள்ளன. அனைத்து ரோடுகளிலுமே கழிவு நீர் மற்றும் மழைநீர் குட்டைகளாக தேங்கி உள்ளது.

தண்ணீர் குட்டை இல்லாத வீதியே கிடையாது. நெடுஞ்சாலை துறை ரோட்டையும், நகரில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் ரோட்டையும் இணைக்கும் பிரதான சாலையில் 6 கழிவு நீர்குட்டைகள் உள்ளன.பள்ளி இருப்பதால் இந்த ரோடு வழியாக நுாற்றுக்கணக்கான குழந்தைகள் இந்த குட்டையில் இறங்கி செல்லும் அவலம் தொடர்கிறது. குறுக்கு சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக பல இடங்களில் இருந்து வந்த தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த வீதிகளில் வரும் தண்ணீர் அருகில் உள்ள கால்வாய் வழியாக கிராமத்திலுள்ள கண்மாய்க்கு செல்லும். தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாயையும், அந்த கால்வாய்க்கு செல்லும் வழியையும் காணவில்லை.ராமநாதன் கூறுகையில், கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லை. பெருமாள் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேற கட்டப்பட்ட கால்வாயும் குப்பைகளால் அடைபட்டு போய்விட்டது.கால்வாயை சீரமைத்து தண்ணீர் வெளியேற்ற வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X