சிதையும் நெடுஞ்சாலை; வழிந்தோடும் கழிவு நீர்; பரிதவிப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்கள்| Dinamalar

சிதையும் நெடுஞ்சாலை; வழிந்தோடும் கழிவு நீர்; பரிதவிப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்கள்

Added : நவ 24, 2021
Share
ஸ்ரீவில்லிபுத்துார் : குண்டும், குழியுமாக நாளுக்கு நாள் சிதைந்து வரும் தேசிய நெடுஞ்சாலை, அடைப்புகளால் தேங்கி வழியும் கழிவு நீர், மண்மேடுகளால் சகதி என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் பொதுமக்கள்.நகரின் மையப்பகுதி வழியாக மதுரை- -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் தினமும் ஏராளமான டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பயணித்து

ஸ்ரீவில்லிபுத்துார் : குண்டும், குழியுமாக நாளுக்கு நாள் சிதைந்து வரும் தேசிய நெடுஞ்சாலை, அடைப்புகளால் தேங்கி வழியும் கழிவு நீர், மண்மேடுகளால் சகதி என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் பொதுமக்கள்.

நகரின் மையப்பகுதி வழியாக மதுரை- -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் தினமும் ஏராளமான டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பயணித்து வருகின்றன. இச் சாலையில் ஸ்ரீவி., பைபாஸ் ரோடு முனியாண்டி கோயில் வளைவு, காமராஜர் சிலை வளைவு, ராமகிருஷ்ணாபுரம், இந்திராநகர் பகுதிகளில் ரோடு சிதைந்து பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த மழையில் ரோடு சிதைந்து அதன் ஜல்லிகற்கள் வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து வருகிறது.

டூவீலரில் செல்பவர்கள் சறுக்கி விழுகின்றனர். ரோட்டின் இருபுறமும் மண்மேடாக இருப்பதால் மழைநீர் ரோட்டில் தேங்கி சகதியாக வாகனங்களை வழுக்கி விடுகின்றன.காமராஜர் சிலையில் இருந்து வடமலைக்குறிச்சி சுடுகாடு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாக்கடை அடைப்பட்டு கிடக்கிறது. பைபாஸ் ரோட்டில் முருகன் கோயிலில் இருந்து காமராஜர் சிலை வரை ரோட்டில் சாக்கடை அடிக்கடி தேங்கி வழிகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X