சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே நடுரோட்டில் விடப்படும் வளர்ப்பு மாடுகளால் விபத்துகள் நடக்கின்றன.
இவ்வொன்றியத்தில் அரளிக்கோட்டையில்இருந்து மேலுார் செல்லும்சாலையில் மாடுகள் வளர்ப்பவர்கள் நடு ரோட்டிலேயே விட்டுள்ளனர். குறிப்பாக ஜெயங்கொண்ட நிலை, எஸ்.மாம்பட்டி, வடவன்பட்டி, ஏரியூர், கணேசபுரம், ஆபத்தாரணபட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளும், பொது மக்களும் ஏராளமான மாடுகளை வளர்க்கிறார்கள்.கேரளாவிலிருந்து இப்பகுதிக்கு வந்து மாட்டுச்சாணத்தை வாங்கிச் செல்வதால் மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.
ஆனால் மாடுகளை பெரும்பாலும் பட்டியில் அடைத்தோ கயறு மூலம் கட்டியோ வைப்பதில்லை. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குஉள்ளாகி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்.சாலைகளில் மாடுகளை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விபத்து தொடர்கின்றன .
சபா ஞானசீலன், ஒப்பிலான்பட்டி: இப்பகுதியில் மாடுகள் வளர்ப்போர் அவற்றை முறையாக கட்டி வைப்பதில்லை. அவை சாலைகளில் படுத்து கொள்வதால் விபத்து ஏற்படுகின்றன. பகல் நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் இந்த மாடுகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE