சரவெடி தயாரிக்க அனுமதியுங்க... கிராம மக்கள் எச்சரிக்கை நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சரவெடி தயாரிக்க அனுமதியுங்க... கிராம மக்கள் எச்சரிக்கை நோட்டீஸ்

Added : நவ 24, 2021
Share
சிவகாசி : சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிக்க அனுமதி வழங்குங்க, போராட்டத்திற்கு துாண்டாதே என, அச்சங்குளம் கிராம மக்கள் பெயரில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அச்சன்குளம், 20 கிராமங்களில் 3000க்கு மேற்பட்டோர் பட்டாசு தொழில் வேலை பார்க்கின்றனர். பட்டாசு தொழிலில் சரவெடி தயாரிப்பு மிக முக்கியமானது. 50 ஆண்டு காலம் ஒரே

சிவகாசி : சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிக்க அனுமதி வழங்குங்க, போராட்டத்திற்கு துாண்டாதே என, அச்சங்குளம் கிராம மக்கள் பெயரில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அச்சன்குளம், 20 கிராமங்களில் 3000க்கு மேற்பட்டோர் பட்டாசு தொழில் வேலை பார்க்கின்றனர். பட்டாசு தொழிலில் சரவெடி தயாரிப்பு மிக முக்கியமானது. 50 ஆண்டு காலம் ஒரே தொழிலில் வேலை பார்க்கும் நல்ல அனுபவம் உள்ளவர்களால் தயாரிக்கப்படும் சரவெடி உற்பத்தியை ஏன் நிறுத்த வேண்டும். தமிழக அரசு தடை இல்லா சரவெடி தயாரிக்க நடவடிக்கை எடு, தொழிலாளர்களை போராட்டத்திற்கு துாண்டாதே. அச்சன்குளம் கிராம மக்கள் -சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் என, குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X