சிட்டி கிரைம்

Added : நவ 24, 2021
Advertisement
மருத்துவமனை ஊழியர் மாயம்விருதுநகர்: வடமலைகுறிச்சி அருகே நந்திரெட்டிய பட்டியை சேர்ந்தவர் விருதுநகர் மருத்துவமனை ஊழியர் மொட்டடையம்மாள். இவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மொட்டையம்மாள்தினமும் வேலை முடிந்து இரவு 8:30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவார். நவ.21ல் வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.மாமியாரை மிட்டிய மருமகன்

மருத்துவமனை ஊழியர் மாயம்

விருதுநகர்: வடமலைகுறிச்சி அருகே நந்திரெட்டிய பட்டியை சேர்ந்தவர் விருதுநகர் மருத்துவமனை ஊழியர் மொட்டடையம்மாள். இவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மொட்டையம்மாள்தினமும் வேலை முடிந்து இரவு 8:30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவார். நவ.21ல் வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாமியாரை மிட்டிய மருமகன் கைது

சிவகாசி: கீழ திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் சாந்தகுமாரி 42. இவரது மருமகன் கோடீஸ்வரன் 21. கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வெளியே வந்த இவர், மாமியாரிடம், நான் ஜெயிலில் இருந்த போது ஏன் பார்க்கவில்லை, என் மனைவி குழந்தையை பிரித்து விட்டாய் என தகாத வார்த்தையால் பேசி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். கிழக்கு போலீசார் கோடீஸ்வரனை கைது செய்தனர்.

எஸ்.ஐ.,க்களை மிரட்டியவர் கைது

சிவகாசி: மம்சாபுரம் நரிக்குடி ரோடு ஆத்துார் சுப்பிரமணியபுரம் பஸ் ஸ்டாப்பில் மாரனேரி சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மாரியப்பன், திருமங்கை ஆழ்வார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த நதிக்குடியை சேர்ந்த முத்துமாரி 38, மது போதையில் எதுக்குடா வாகன தணிக்கை செய்றீங்க என தகராறு செய்து எஸ்.ஐ.,க்களுக்கு மிரட்டல் விடுத்தார். அவரை மாரனேரி போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை இறப்பில் சந்தேகம்

ராஜபாளையம்: இனாம்செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி கோவிந்தம்மாள். 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து 5 வயது, ஒன்றரை வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது நிறை மாத கார்ப்பிணியாக இருந்த கோவிந்தம்மாளுக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்து இறந்தது. குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வி.ஏ.ஓ., ஸ்ரீனிவாசன் புகார் தெரிவிக்க வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற பெண்புகார் மீது போலீஸ் நடவடிக்கை

சாத்துார்: ராவுத்தன் பட்டியை சேர்ந்தவர் விவசாயி பொன்மாரியப்பன் 47. ஒன்றரை ஏக்கரில் மக்காச்சோளம் பயிர்செய்திருந்தார். முன்பகை காரணமாக அதே ஊரை சேர்ந்த ஜெயபால், சுப்புராஜ் மஞ்சநத்தி பவுடர் துாவி பயிர்களை கருக செய்துள்ளார்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொன்மாரியப்பன் மனைவி தனது குழந்தைகளுடன் நேற்று முன் தினம் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதை தொடர்ந்தே தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல்

ஸ்ரீவில்லிபுத்துார்: மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசி மூலம் பேசிய நபர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாரில் இயங்கி வரும் நைட்டி கம்பெனியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக பலமுறை கூறி உள்ளார்.அலைபேசி எண்ணை வைத்து விசாரித்ததில் வத்திராயிருப்பை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்தது. அவரை விசாரித்ததில் குடிபோதையில் பேசியது தெரியவர, அவரை எச்சரித்து அனுப்பினர்.

மின்னல் தாக்கி பலி

சாத்துார்: வன்னிமடையை சேர்ந்தவர் விவசாயி வேல்ச்சாமி 62. நேற்று மாலை 4:50 மணிக்கு தனது நிலத்தில் நின்றபோது இடிமின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் வேல்ச்சாமி பலியானார். மேய்ச்சலுக்கு வந்த பசுமாடும் பலியாகியது. இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X