வீட்டிலிருந்து தண்ணீருடன் செல்லும் மாணவிகள்; அ.காளாப்பூர் அரசு பள்ளியில் நடக்கும் அவலம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அரசு பெண்கள் பள்ளியில் தண்ணீர் இல்லாததால் கழிவறைக்கு தேவையான தண்ணீரை கூட மாணவிகள் வீடுகளில் இருந்தே கொண்டு செல்லும் அவலம் நீடிக்கிறது.இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர் கிராம அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 130க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். 10 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.இங்குள்ள போர்வெல் வறண்டதைத்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அரசு பெண்கள் பள்ளியில் தண்ணீர் இல்லாததால் கழிவறைக்கு தேவையான தண்ணீரை கூட மாணவிகள் வீடுகளில் இருந்தே கொண்டு செல்லும் அவலம் நீடிக்கிறது.

இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர் கிராம அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 130க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். 10 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.இங்குள்ள போர்வெல் வறண்டதைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகேயுள்ள தொட்டியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. அத்தண்ணீரையே ஆசிரியர்கள், மாணவிகள் குடிப்பதற்கும், சத்துணவு சமைப்பதற்கும், கழிப்பறை தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது நடைபெற்று வரும் காரைக்குடி திண்டுக்கல் சாலை அகலப்படுத்தும் பணியின் போது இக்குழாய்கள் உடைந்து தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.பல மாதங்கள் ஆகியும் சேதமடைந்த குழாய்களை சரி செய்ய முடியவில்லை. பள்ளிக்கு தண்ணீர் ஆதாரமே இல்லாமல் போய்விட்டது. தண்ணீர் இல்லாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை.

குடிநீரை கூட வீட்டில் இருந்து கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் கழிப்பறைக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பலர் வீட்டிலிருந்து வரும் போதே குடிநீருடன் கழிப்பறைக்கு தேவைப்படும் தண்ணீரையும் சேர்த்தே கொண்டு வந்து விடுகிறார்கள். தண்ணீர் கிடைக்காத நிலையில் சில மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள தென்னந்தோப்புக்கு குழுவாக சென்று தண்ணீர் பிடித்து வந்து கழிப்பறை தொட்டியில் ஊற்ற வேண்டிய நிலை உள்ளது.

இது மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகிறது. மாணவிகளின் பெற்றோர்கள் வேதனையில் உள்ளனர். நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரை இப்பள்ளிக்கு தேவையான தண்ணீரை உடனடியாக தினமும் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகத்தை பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X