பொது செய்தி

தமிழ்நாடு

சாம்பான் ஊரணிக்கு நீர்வரத்து துவக்கம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் சாம்பான் ஊரணிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது.நகரின் பிரதான குடிநீர் ஊரணியாக சாம்பான் ஊரணி இருந்தது. பெரிய கண்மாய் நடுமடை வரத்துக் கால்வாய் மூலம் நீர்வரத்து இருந்தது. கால்வாய் துார்ந்து போனதால் பல ஆண்டுகளாக நீர்வரத்தின்றி வறண்டது. 2004ல் குடிநீர் வாரியத்தினரால் ஊரணி புனரமைக்கப்பட்டு நீர் வரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டது. பின்னர்

திருப்புத்துார் : திருப்புத்துார் சாம்பான் ஊரணிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது.நகரின் பிரதான குடிநீர் ஊரணியாக சாம்பான் ஊரணி இருந்தது.

பெரிய கண்மாய் நடுமடை வரத்துக் கால்வாய் மூலம் நீர்வரத்து இருந்தது. கால்வாய் துார்ந்து போனதால் பல ஆண்டுகளாக நீர்வரத்தின்றி வறண்டது. 2004ல் குடிநீர் வாரியத்தினரால் ஊரணி புனரமைக்கப்பட்டு நீர் வரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டது. பின்னர் அதுவும் சேதமடைந்து பயனின்றி போனது.தற்போது பேரூராட்சி தரப்பில் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டு நீர்வரத்து துவங்கியுள்ளது.

தற்போது குடிநீருக்கு பயன்படாவிட்டாலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் ஆதாரமாக ஊரணி பயன்படுகிறது. இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தெம்மாப்பட்டு தம்மம் ஊரணி வரத்துக்கால்வாய்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு நீர்வரத்துக்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X