சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்க வளாகத்தில்மரங்கள் வெட்டிச்சாய்ப்பு :வருவாய் துறையினர் விசாரணை

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஒரு வேன் நிறைய மரக்கிளைகள் வெட்டி கொண்டு செல்லப்பட்டது குறித்து வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.திருப்பூர், பல்லடம் ரோட்டில் திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகம் உள்ளது. இவ்வளாகத்தில் ஏராளமான மரங்கள் நீண்ட காலமாக வளர்ந்து காணப்படுகிறது.நேற்று அவ்வளாகத்தில் இருந்த ஏராளமான மரங்களின்
 கூட்டுறவு சங்க வளாகத்தில்மரங்கள் வெட்டிச்சாய்ப்பு :வருவாய் துறையினர் விசாரணை

திருப்பூர்:திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஒரு வேன் நிறைய மரக்கிளைகள் வெட்டி கொண்டு செல்லப்பட்டது குறித்து வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.திருப்பூர், பல்லடம் ரோட்டில் திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகம் உள்ளது. இவ்வளாகத்தில் ஏராளமான மரங்கள் நீண்ட காலமாக வளர்ந்து காணப்படுகிறது.நேற்று அவ்வளாகத்தில் இருந்த ஏராளமான மரங்களின் கிளைகளும் வெட்டி எடுக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட சில தொழிலாளர்கள் அக்கிளைகளை துண்டுகளாக அறுத்து ஒரு சரக்கு வேன் நிறைய ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். ஒரு மரம் முற்றிலுமாக வெட்டப்பட்டது.இதையறிந்த இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் பெற சங்க அலுவலகத்தை அணுகிய போது அங்கு அலுவலர்கள் யாரும் இல்லை. வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து வருவாய் துறை, பசுமைக்குழுவுக்கு உரிய தகவலோ, அனுமதியோ பெறப்படவில்லை. தெற்கு வருவாய் ஆய்வாளர் இது குறித்து விசாரணை நடத்துகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X