பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்; அசோகன் எம்.எல்.ஏ., தகவல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சிவகாசி : ''சிவகாசியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகிக்க உள்ளதாக ,'' அசோகன் எம்.எல்.ஏ., கூறினார்.சிவகாசி மின் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்விநியோகம் தொடர்பான ஆசோசனை கூட்டம் நடந்தது. காங்., எம்.எல்.ஏ., அசோகன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர பொறுப்பாளர் காளிராஜ், மின்துறை

சிவகாசி : ''சிவகாசியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகிக்க உள்ளதாக ,'' அசோகன் எம்.எல்.ஏ., கூறினார்.

சிவகாசி மின் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்விநியோகம் தொடர்பான ஆசோசனை கூட்டம் நடந்தது. காங்., எம்.எல்.ஏ., அசோகன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர பொறுப்பாளர் காளிராஜ், மின்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ., கூறியதாவது:

சிவகாசி மாநகராட்சி பகுதியில் 24 மணிநேரமும் மும்முனை மின்சார விநியோகம் வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக பாறைப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் விஸ்வநத்தம் ரூரல் பீடர் நகர் பீடராக மாற்றப் பட்டுள்ளது. விஸ்வநத்தம், சித்துராஜபுரம், பேர்நாயக்கன் பட்டி பகுதி 9 ஆயிரத்து 635 மின் இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படும்.

இதன் மூலம் இப்பகுதி தொழில் நிறுவனங்கள் இனி 24 மணிநேரமும் இயங்கும். மாநகராட்சி பகுதியில் இணைந்துள்ள ஆனையூர், நாரணாபுரம், தேவர்குளம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலும் 24 மணிநேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X