கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கபடி வீராங்கனைக்கு வேலை கோரிய மனு நிராகரிப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:கபடி வீராங்கனைக்கு, விளையாட்டு துறையில் வேலை வழங்கக்கோரி, தமிழ்நாடு விளையாட்டு வீரர் சங்கம் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.தமிழ்நாடு விளையாட்டு வீரர் சங்கத்தின் பொதுச்செயலர் அய்யப்பன் தாக்கல் செய்த மனு: இந்திய மகளிர் கபடி குழுவின் கேப்டனாக கவிதா திகழ்ந்தார். பரிதாபம்ஆசிய விளையாட்டு போட்டியில், நான்கு முறை தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை:கபடி வீராங்கனைக்கு, விளையாட்டு துறையில் வேலை வழங்கக்கோரி, தமிழ்நாடு விளையாட்டு வீரர் சங்கம் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
தமிழ்நாடு விளையாட்டு வீரர் சங்கத்தின் பொதுச்செயலர் அய்யப்பன் தாக்கல் செய்த மனு: இந்திய மகளிர் கபடி குழுவின் கேப்டனாக கவிதா திகழ்ந்தார். பரிதாபம்ஆசிய விளையாட்டு போட்டியில், நான்கு முறை தங்கப்பதக்கம் வென்றார்.
தற்போது, சென்னையை அடுத்த ஆவடியில் வசிக்கிறார். அவரது குடும்ப சூழ்நிலை பரிதாபமாக உள்ளது.கடந்த 2005ல் கான்ஸ்டபிளாக நியமிக்கப்பட்டார். பின், ஹவில்தாராக பதவி உயர்வு பெற்றார். சர்வதேச அளவில் சாதனை புரிந்தும், போலீஸ் துறையில் உரிய அங்கீகாரம் கிடைக்க வில்லை. சப் - இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்க கூடுதல் டி.ஜி.பி., பரிந்துரைத்தும் வழங்கப்படவில்லை.
தொடர்ந்து பணிக்கு வரவில்லை என, 2013 ஆகஸ்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார். வேலை இல்லாததால், அவரது குடும்பம் வறுமையில் உள்ளது; அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் கவிதாவுக்கு தகுந்த வேலை வழங்கக்கோரி, எங்கள் சங்கம் சார்பில் அரசுக்கு மனு அனுப்பினோம். மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.'
முதல் பெஞ்ச்'மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது, 'கவிதாவுக்கு போலீஸ் துறையில் பணி வழங்கப்பட்டது; தொடர்ந்து பணிக்கு வராததால் பணி நீக்கம் செய்யப் பட்டார். அதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'கவிதாவின் விளையாட்டு சாதனையை அரசு அங்கீகரிக்கவில்லை என்று கூற முடியாது; பணி நீக்கத்தை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். 'ஒருவரது தனிப்பட்ட உரிமைக்காக, பொதுநல வழக்கு தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X