சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உண்டியல் பணத்தை திருடி 'ரெஸ்ட்' எடுத்து 'எஸ்கேப்': பெண்ணை தேடும் போலீசார்

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:விநாயகர் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய பெண், கோவிலில் ஓய்வு எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகர் முதல் வீதி கிழக்கு பகுதியில், வலம்புரி ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த, 21ம் தேதி வழக்கம் போல் பூஜைகள் செய்து விட்டு, பூஜாரி பூட்டி சென்றனர்.மறுநாள் கோவிலை திறக்க வந்த போது, கோவில்
 உண்டியல் பணத்தை திருடி 'ரெஸ்ட்' எடுத்து 'எஸ்கேப்': பெண்ணை தேடும் போலீசார்

திருப்பூர்:விநாயகர் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய பெண், கோவிலில் ஓய்வு எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகர் முதல் வீதி கிழக்கு பகுதியில், வலம்புரி ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த, 21ம் தேதி வழக்கம் போல் பூஜைகள் செய்து விட்டு, பூஜாரி பூட்டி சென்றனர்.மறுநாள் கோவிலை திறக்க வந்த போது, கோவில் உண்டியலில் பணம் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது. புகாரின் பேரில், நல்லுார் போலீசார் விசாரித்தனர். அதில், நள்ளிரவில் காம்பவுண்ட் சுவற்றை ஏறி குதித்து, கோவிலுக்குள் நுழைந்த பெண் ஒருவர், உண்டியலில் உள்ள பணத்தை திருடி சென்றது தெரிந்தது.பணத்தை திருடிய பெண் கோவில் வளாகத்தில், இரண்டு மணி நேரம் துாங்கி சென்றார். இதுதொடர்பான காட்சிகள், கோவிலில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்தது.2 முறை திருட்டுகோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:கடந்த, 16ம் தேதி கோவிலுக்குள் நுழைந்த பெண் ஒருவர், உண்டியலை கம்பியால் நெம்பி, குச்சியில் பசையை தடவி, ஒவ்வொரு ரூபாய் நோட்டாக திருடி சென்றார். திருட்டு தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்கள் கழித்து மீண்டும் கோவிலுக்குள் நுழைந்து அதே பெண் திருட்டில் ஈடுபட்டார்.உண்டியலில், 10 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை இருந்திருக்கலாம். கோவில் அருகே உள்ள கார் ஸ்டாண்டில் நின்றிருந்த கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X