பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டுமா?

Added : நவ 24, 2021
Share
கூடலுார்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் அவ்வப்போது பெய்யும் மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. அணையின் மொத்த உயரம் 152 அடி. ஒரு மாதமாக நீர்ப்பிடிப்பில் மழை பெய்வதும், பின் குறைவதுமாக உள்ளது. அக்டோபர் 25ல் துவங்கிய கன மழையால்

கூடலுார்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் அவ்வப்போது பெய்யும் மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. அணையின் மொத்த உயரம் 152 அடி. ஒரு மாதமாக நீர்ப்பிடிப்பில் மழை பெய்வதும், பின் குறைவதுமாக உள்ளது. அக்டோபர் 25ல் துவங்கிய கன மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டும் வாய்ப்பிருந்தும், 'ரூல் கர்வ்' முறையை அமல்படுத்தி, கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றியதால், நீர்மட்டத்தை அந்த நேரத்தில் உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
நவம்பர் 30ல், ரூல் கர்வ் முறைப்படி நீர்மட்டம் 142 அடியாக தேக்கலாம். சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,862 கன அடியாக இருந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து 2,264 கன அடியாக இருந்தது.

தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1,867 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் சற்று உயர்ந்து 141.40 அடியாக இருந்தது.3வது முறைநீர்மட்டம் உயர்வதன் அடிப்படையில், கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அக்டோபர் 29ல் கேரளாவுக்கு 2,950 கன அடி வெளியேற்றப்பட்டு நவம்பர் 6ல் நிறுத்தப்பட்டது. அதன்பின் நவம்பர் 17ல், இரண்டாவது முறையாக 781 கன அடி வெளியேற்றி நவம்பர் 22ல் நிறுத்தப்பட்டது. நேற்று மூன்றாவது முறையாக, மூன்றாவது ஷட்டர் மூலம் 397 கன அடி நீர் கேரளப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டது.


மேட்டூர் அணைக்கு 58 டி.எம்.சி., வரத்து

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து நீர்வரத்து அதிகரித்ததால் நவம்பர் 13ல் மேட்டூர் அணை நிரம்பியது.மறுநாள் அதிகாலை முதல் அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. கடந்த இரு நாட்களாக அணைக்கு வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில், அதே அளவு உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

கர்நாடகா, நவம்பர் மாதம் தமிழகத்திற்கு, 13.78 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். ஆனால், கடந்த 23 நாட்களிள் மேட்டூர் அணைக்கு, 58 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. இதில் 30 டி.எம்.சி., நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 120.10 அடி. நீர் கொள்ளளவு 93.66 டி.எம்.சி.,யாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X