பயன்பாட்டிற்கு வரும் முன்பே பல் இளித்த 4 வழிச்சாலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வரும் முன்பே பல் இளித்த 4 வழிச்சாலை

Added : நவ 24, 2021
Share
தஞ்சாவூர்:தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலை, பயன்பாட்டுக்கு வரும் முன்பே வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கியது.தஞ்சாவர் - விக்கிரவாண்டி இடையே, 164 கி.மீ., சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற, 3,517 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, பணிகள் இறுதி கட்டத்தை எட்டிஉள்ளன. அடுத்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம்,
 பயன்பாட்டிற்கு வரும் முன்பே பல் இளித்த 4 வழிச்சாலை

தஞ்சாவூர்:தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலை, பயன்பாட்டுக்கு வரும் முன்பே வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கியது.
தஞ்சாவர் - விக்கிரவாண்டி இடையே, 164 கி.மீ., சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற, 3,517 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, பணிகள் இறுதி கட்டத்தை எட்டிஉள்ளன. அடுத்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அன்னப்பன்பேட்டை அருகே, நான்கு வழிச்சாலையில் தொடர் மழை காரணமாக, 1 அடிக்கு மேல் உள்வாங்கியுள்ளது. பயன்பாட்டிற்கு வராத நிலையில், உள்வாங்கி இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.எனவே, 'வல்லுனர் குழு அமைத்து சாலையின் தரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X