போலீஸ் செய்திகள்| Dinamalar

போலீஸ் செய்திகள்

Added : நவ 24, 2021
Share
50 பவுன் கவரிங் நகை மோசடி; சிவகங்கை போலீஸ் விசாரணைசிவகங்கை: திருப்புவனம் அருகே டி.புதுார் ஆனந்தன் 47. இவர் மதுரை விரகனுாரில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பொருட்கள் வாங்கிய வகையில் ஒரு பெண் உட்பட 3 பேர் பழகியுள்ளனர். இதை நம்பிய ஆனந்தனிடம் ரூ.10 லட்சம் கொடுத்தால் 50 பவுன் நகை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய ஆனந்தன் ரூ.5 லட்சம் மட்டுமே தர


50 பவுன் கவரிங் நகை மோசடி; சிவகங்கை போலீஸ் விசாரணை


சிவகங்கை: திருப்புவனம் அருகே டி.புதுார் ஆனந்தன் 47. இவர் மதுரை விரகனுாரில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பொருட்கள் வாங்கிய வகையில் ஒரு பெண் உட்பட 3 பேர் பழகியுள்ளனர். இதை நம்பிய ஆனந்தனிடம் ரூ.10 லட்சம் கொடுத்தால் 50 பவுன் நகை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பிய ஆனந்தன் ரூ.5 லட்சம் மட்டுமே தர முடியும் என கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட மூன்று பேரும் நவ.,22 அன்று காலை 8:30 மணிக்கு சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நின்ற ஆனந்தனிடம் ரூ.5 லட்சம் பெற்று 50 பவுன் நகை எனக்கூறி போலி நகையை கொடுத்துள்ளனர்.

ஆனந்தன் நகை கடையில் பரிசோதனை செய்த போது 50 பவுன் நகையும் கவரிங் என தெரிந்து கொண்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆனந்தன் சிவகங்கை ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரித்து வருகிறார்.


மனைவிக்கு கொலை மிரட்டல்; கணவர் மீது வழக்கு


சிவகங்கை: மேலசாலுார் சாமிக்கண்ணு 37. இவரது மனைவி மாலதி 35. இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது பிரச்னை குறித்து சிவகங்கை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. நவ.,21 அன்று மதியம் 2:30 மணிக்கு மாலதி வீட்டிற்கு சென்ற சாமிக்கண்ணு நீதிமன்ற விசாரணைக்கு செல்லக்கூடாது என தடுத்து கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., ராஜா விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X