பொது செய்தி

தமிழ்நாடு

பணி நிரந்தரம் கோரி செயலரிடம் மனு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், தலைமை செயலகத்தில் நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறிருப்பதாவது:ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் அனைவருக்கும், உடனடியாக பணி நிரந்தரம் வழங்கி, ஊதியத்தை மாநில அரசின் நிரந்தர துாய்மை பணியாளர்கள்

சென்னை:தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், தலைமை செயலகத்தில் நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறிருப்பதாவது:ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் அனைவருக்கும், உடனடியாக பணி நிரந்தரம் வழங்கி, ஊதியத்தை மாநில அரசின் நிரந்தர துாய்மை பணியாளர்கள் ஊதியத்திற்கு நிகராக உயர்த்திட வேண்டும்.மருத்துவ வசதி உட்பட தமிழக அரசு பணியாளர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டும்.
வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்றவை வழங்குவதுடன், கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான சிறப்பு ஊதியத்தையும் வழங்கிட வேண்டும். தினமும் 12 மணி நேர வேலை என்பதை ரத்து செய்து, 8 மணி நேரமாக நடைமுறை படுத்த வேண்டும். இலவச சீருடை, இலவச பஸ் பயண அட்டையும் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X