தமிழ்நாடு

அருப்புக்கோட்டை வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்கலாமே !

Added : நவ 24, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : விருதுநகர் - மானாமதுரை வழித்தடம் அகலரயில் பாதையாக மாறியும் சென்னைக்கு தினசரி ரயில்கள் இயக்காது ரயில்வே துறை அலட்சியம் காட்டும் நிலையில், பயணிகள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.விருதுநகர் மானாமதுரை ரயில் பாதை அகல் ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்பு இதன் வழித்தடங்களில் உள்ள அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி ரயில்வே ஸ்டேஷன்கள் நவீன வசதிகளுடன்

அருப்புக்கோட்டை : விருதுநகர் - மானாமதுரை வழித்தடம் அகலரயில் பாதையாக மாறியும் சென்னைக்கு தினசரி ரயில்கள் இயக்காது ரயில்வே துறை அலட்சியம் காட்டும் நிலையில், பயணிகள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.

விருதுநகர் மானாமதுரை ரயில் பாதை அகல் ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்பு இதன் வழித்தடங்களில் உள்ள அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி ரயில்வே ஸ்டேஷன்கள் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கபட்டது. இதை தொடர்ந்து பொதுமக்களும் இனி சென்னை ,பிற ஊர்களுக்கு தினசரி செல்ல ரயில்கள் இயக்கப்படும் என்று எண்ணிய நிலையில் , ஒரே ரயிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் மட்டும் வாரத்திற்கு 3 முறை இயக்க பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளிலிருந்து சென்னை செல்ல தினமும் 500 க்கு மேற்பட்ட பயணிகள் உள்ளனர். தினசரி ரயில் இல்லாததால் அரசு ,தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையில் உள்ளனர். வர்த்தகர்கள் , மாணவர்களும் ரயில் இன்றி சிரமப்படுகின்றனர். இப்பகுதி மக்கள் 2,3 பஸ்கள் மாறி விருதுநகர் ,மதுரை சென்று ரயில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்கள் வசதிகளுடன் இருந்தும் போதுமான ரயில்கள் இயங்காததால் ஸ்டேஷன்கள் கட்டடம் காட்சி பொருளாகவே உள்ளன. ரூ. கோடிக் கணக்கில் செலவழித்தும் ஸ்டேஷன்கள் தற்போது 'வாக்கிங்' செல்லும் இடமாக மாறி விட்டது. வர்த்தகசங்கம் ,ரயில்கள் பயணிப்போர் நலச்சங்கம் மூலம் மத்திய அமைச்சர்,ரயில்வே அதிகாரிகளிடம் தொடர் மனுக்கள் கொடுத்தும் கண்டு கொள்வதில்லை.

எம்.பி., , அமைச்சர்களும் இதுகுறித்து அரசிடம் வலியுறுத்துவதில்லை. இதனால் ரயில் வசதிகளில் அருப்புக்கோட்டை ,திருச்சுழி ,நரிக்குடி சுற்றுப்பகுதி மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இப் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில் இயக்கவும், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்..........

சிலம்பை தினமும் இக்கலாமே

அருப்புக்கோட்டை வழியாக சென்னைக்கு தினமும் ரயில் இயக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமிடம் மனு கொடுத்துள்ளோம். ரயில்வே அதிகாரிகளிடம் தினசரி ரயில்கள் இயக்க வலியுறுத்தி வருகிறோம். அருப்புக்கோட்டையிலிருந்து அதிக அளவில் பயணிகள் சென்னை வந்து செல்வதால் ரயில்வேதுறைக்கு வருமானம் கூடும். இதை கருத்தில் கொண்டாவது ரயில்வே அதிகாரிகள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலையாவது தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.காசிமுருகன், பொருளாளர், வர்த்தகர்சங்கம், அருப்புக்கோட்டை...............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X