சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டவுன் பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
காரைக்குடி : சாக்கோட்டை அருகேயுள்ள பெரியகொட்டகுடிக்கு பல மாதங்களாக தாமதமாக வந்து செல்லும் டவுன் பஸ்சை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.சாக்கோட்டை அருகேயுள்ள பெரியகொட்டகுடி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளி கல்லுாரிக்கு தினமும் புதுவயல், காரைக்குடிக்கு சென்று வருகின்றனர்.

காரைக்குடி : சாக்கோட்டை அருகேயுள்ள பெரியகொட்டகுடிக்கு பல மாதங்களாக தாமதமாக வந்து செல்லும் டவுன் பஸ்சை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.

சாக்கோட்டை அருகேயுள்ள பெரியகொட்டகுடி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளி கல்லுாரிக்கு தினமும் புதுவயல், காரைக்குடிக்கு சென்று வருகின்றனர். காரைக்குடியிலிருந்து தச்சக்குடிக்கு தினமும், காலை 8:00 மணி தொடங்கி இரவு எட்டு மணி வரையிலும் 5 முறை டவுன்பஸ் வந்து செல்கிறது.டவுன் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை, பஸ் எண்கள் மாறி மாறி வருவதால் குழப்பம் ஏற்படுவதாக கூறி நேற்று பெரியகொட்டகுடி கிராம மக்கள் டவுன் பஸ்சை சிறைபிடித்தனர்.

ஊராட்சி தலைவர் தனபால் கூறுகையில்; இப்பகுதியில் இருந்து தினமும் நுாற்றுக் கணக்கான மாணவர்கள் பள்ளி கல்லுாரிக்கு சென்று வருகின்றனர். தற்போது விவசாய வேலை நடப்பதால் விவசாயப் பணிக்காக வெளியூரில் இருந்தும் வேலைக்கு மக்கள் வந்து செல்கின்றனர். முறையாக வந்த டவுன்பஸ் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக வருவதில்லை.

வரக்கூடிய டவுன் பஸ்கள் பலவும் ஒரே எண்கள் கொண்டதாக இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண் கொண்ட பஸ்சாக உள்ளது. இதனால், மக்கள் குழப்பம் அடைகின்றனர். மேலும், பள்ளி கல்லுாரி செல்லும் போதும் வரும் போதும் உரிய நேரத்திற்கு பஸ்கள் வராததால் மாணவிகள் இரவு 8:00 மணி வரை வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X