கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பூசாரியாக சிறுவன்: எதிர்த்து வழக்கு:அறநிலையத்துறை பதில் அளிக்க உத்தரவு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:நீலகிரி மாவட்டத்தில் குலதெய்வம் கோவிலில், 5 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்த வழக்கில், அறநிலையத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு கிராமத்தை சேர்ந்த சிவன் தாக்கல் செய்த மனு: கோத்தகிரி அருகே நடுஹட்டி கிராமத்தில், ஹெத்தை அம்மன் கோவில் உள்ளது; படுகர் இனத்தவரின் குல தெய்வ கோவில் இது. நிர்வாக

சென்னை:நீலகிரி மாவட்டத்தில் குலதெய்வம் கோவிலில், 5 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்த வழக்கில், அறநிலையத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு கிராமத்தை சேர்ந்த சிவன் தாக்கல் செய்த மனு: கோத்தகிரி அருகே நடுஹட்டி கிராமத்தில், ஹெத்தை அம்மன் கோவில் உள்ளது; படுகர் இனத்தவரின் குல தெய்வ கோவில் இது. நிர்வாக பிரச்னை காரணமாக 1994ல் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வந்தது. இருந்தாலும், 19 கிராமங்களை சேர்ந்த 3,000 குடும்பத்தினர் இக்கோவிலுக்கு வருகின்றனர்.
கோவிலின் பூசாரியாக, 2019ல் 5 வயது சிறுவன் நியமிக்கப்பட்டான்; கோவிலில் தங்கியிருக்க வேண்டும். உணவை அவனே தயாரித்து கொள்ள வேண்டும்; உதவிக்கு ஆள் வைத்து கொள்ளலாம். பள்ளிக்கு செல்ல முடியாது. இதனால், அவனது கல்வி தடைபட்டுள்ளது. உரிய பாதுகாப்பின்றி, கோவில் வளாகத்தில் சிறுவன் தங்குவது ஆபத்தானது.
சிறுவனை பள்ளிக்கு செல்லவும், அவனது குழந்தை பருவம் மற்றும் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். பூசாரியாக பணியில் தொடர, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில்,வழக்கறிஞர் தங்க வந்தனா ஆஜரானார்.
நீலகிரி வட்டார கல்வி அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவில், 'சிறுவனின் படிப்பை கண்காணிக்கிறோம். 'கிராம மக்கள் மற்றும் கல்வித்துறை வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது. 'ஆன்லைன்' வாயிலாகவும், கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டு உள்ளது.
இவ்வழக்கில், அறநிலையத் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X