பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருள் வாங்க 5.கி.மீ., நடை பயணம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சிவகங்கை : திருப்புத்துார் அருகே வையகளத்துார் ஊராட்சியில் உள்ள மார்க்கண்டேயன்பட்டி கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ.,துாரம் கண்மாய்களை கடந்து பயணிப்பதால் தனி ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்துள்ளனர்.திருப்புத்துார் ஊராட்சி வையகளத்துார் ஊராட்சியில் மார்க்கண்டேயன்பட்டி, சூரியம்பட்டி கிராமங்கள் உள்ளன. இதில் மார்க்கண்டேயன்பட்டியில் மட்டும் 159 ரேஷன் கார்டுகள்

சிவகங்கை : திருப்புத்துார் அருகே வையகளத்துார் ஊராட்சியில் உள்ள மார்க்கண்டேயன்பட்டி கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ.,துாரம் கண்மாய்களை கடந்து பயணிப்பதால் தனி ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

திருப்புத்துார் ஊராட்சி வையகளத்துார் ஊராட்சியில் மார்க்கண்டேயன்பட்டி, சூரியம்பட்டி கிராமங்கள் உள்ளன. இதில் மார்க்கண்டேயன்பட்டியில் மட்டும் 159 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்கள் பொருட்கள் வாங்க களத்துக்கண்மாய், புதுக்கண்மாய், உரத்தி கண்மாய், கருவை கண்மாய் பகுதிகளை கடந்து 5கி.மீ., துாரம் பயணிக்கும் நிலை உள்ளது. தற்போது கண்மாய்களில் தண்ணீர் இருப்பதால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.2020 ல் ஏற்கனவே தனிரேஷன் கடை கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

புதிய கடையை மார்க்கண்டேயன்பட்டியில் அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.ஒரு ஆண்டு ஆகியும் இன்றுவரை தனி ரேஷன் கடை அமைக்கப்படவில்லை. ரேஷன் கடை அமைப்பதற்கான இட வசதி உட்பட அனைத்தும் மார்க்கண்டேயன்பட்டி பகுதியில் உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க தனி ரேஷன் கடை அமைக்க வேண்டும், என கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X