பொது செய்தி

தமிழ்நாடு

கருவூலக அலுவலக கட்டடம் தேவை  

Added : நவ 24, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு கருவூலக கணக்குத்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிங்கம்புணரியில் புதிய சார்நிலை கருவூலக அலுவலகம் கட்டி தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.கருவூலக கணக்குத்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில கவுரவ தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாண்டி முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகளாக

சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு கருவூலக கணக்குத்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிங்கம்புணரியில் புதிய சார்நிலை கருவூலக அலுவலகம் கட்டி தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.

கருவூலக கணக்குத்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில கவுரவ தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாண்டி முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகளாக தலைவர் சி.ராமு, துணைத்தலைவர் களாக எஸ்.ராஜ்குமார், எல்.கார்த்திகேயன்( புறநகர்), பொதுச்செயலாளராக சி.ரவிச்சந்திரன், பொருளாளராக ராஜசேகர், அமைப்பு செயலாளராக மதிவாணன், பிரசார செயலாளராக பாண்டியன், மகளிர் அணி செயலாளர்களாக பர்வீன்மெர்லியா பேகம், அன்னலட்சுமி, சுகுமாரி, கலாராணி, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிங்கம்புணரி சார்நிலை கருவூலக அலுவலகத்திற்கு புதிய கட்டடம் தேவை, திருப்புவனத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.காளையார்கோவில் தாலுகா துவங்கிய பின் கருவூலக அலுவலகம் இல்லாத நிலையில் உடனடியாக அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X