கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஆட்கொணர்வு' மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநுாலில் வெளியிட்டவருக்கு, 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலுார் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்; இவர், 'மைனர்' பெண்ணை திருமணம் செய்ததாக, பெண்ணின் தாய் அளித்த புகாரில், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்,

சென்னை:பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநுாலில் வெளியிட்டவருக்கு, 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்; இவர், 'மைனர்' பெண்ணை திருமணம் செய்ததாக, பெண்ணின் தாய் அளித்த புகாரில், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின், ஜாமினில் வெளியே வந்தார்.இதற்கிடையில், 18 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. உடனே, அந்த பெண்ணை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரியும், ஆட்கொணர்வு மனுவை சுரேஷ் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி விட்டதால், வழக்கை வாபஸ் பெறும் படி மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், சட்டவிரோத காவலில் அந்த பெண் இருப்பதாகவும், நீதிமன்றத்துக்கு வரவழைத்தால், தன்னுடன் அவர் வந்து விடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.அதனால், அந்த பெண்ணும், தாயாரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர்; மனுதாரரும் இருந்தார்.
பெண்ணிடம் நாங்கள் விசாரித்தோம். சொந்த விருப்பத்தின்படி திருமணம் நடந்ததாகவும், கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் கூறினார். மனுதாரரை விட்டு விலகி விட்டதாகவும், ஏற்கனவே இரண்டு பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண் தெரிவித்தார்.
மகளுடன் நெருக்கமாக இருந்து எடுத்த புகைப்படங்களை, முகநுாலில் மனுதாரர் பதிவிட்டு இருப்பதாக, பெண்ணின் தாயார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய செயல் கண்டிக்கத் தக்கது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 75 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. இதை, எட்டு வாரங்களில், பெண்ணின் தாயாருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X