பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் ரோட்டில் வாரச்சந்தை; அதிகாரிகள் பாராமுகம்; விபத்து ஏற்படும் அபாயம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் வாரச்சந்தை நடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய் நடைபெறும் வாரச்சந்தையில் 300 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்வார்கள். திருப்புவனத்தைச்

திருப்புவனம் : திருப்புவனத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் வாரச்சந்தை நடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய் நடைபெறும் வாரச்சந்தையில் 300 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்வார்கள். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாரச்சந்தைக்கு வந்து செல்வது வழக்கம், சிவகங்கை ரோட்டில் நடந்த வாரச்சந்தையால் அடிக்கடி விபத்து ஏற்பட்டதால் சேதுபதி நகர் எதிரே உள்ள இடத்தில் வாரச்சந்தை மாற்றப்பட்டு சந்தையினுள் பேரூராட்சி சார்பில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு அடிப்படை வசதி செய்யப்பட்டது.

வியாபாரிகள் பலரும் போதிய இடவசதி இருந்தும் சந்தையினுள் கடைகள் அமைக்காமல் தேசிய நெடுஞ்சாலையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.ரோட்டிலேயே நின்று பொருட்கள் வாங்குவதால் பஸ்கள் விலக கூட இடமில்லை. இதனால் வாரம்தோறும் செவ்வாய் கிழமை பெரும்பாலான பஸ்கள் நகருக்குள் வருவதை தவிர்த்து பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றன. ரோட்டில் கடைகள் அமைக்க தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X