சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவன் - சிறுமி சாவு போலீசார் விசாரணை

Added : நவ 24, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே, வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன், சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 16 வயது சிறுவன் - சிறுமி. இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தனர். 20ம் தேதி இரவு 7:00 மணியளவில் கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை.

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே, வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன், சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 16 வயது சிறுவன் - சிறுமி. இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தனர். 20ம் தேதி இரவு 7:00 மணியளவில் கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. சிறுவன் மீது சந்தேகம் உள்ளதாக சிறுமியின் பெற்றோர், கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் 21ம் தேதி புகார் அளித்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் கரையோரம் உள்ள வேப்பமரத்தில், சொட்டு நீர்பாசன பைப்பில் துாக்கில் தொங்கியவாறு, அழுகிய நிலையில் சிறுவன் சடலம் இருந்தது. சிறுவன் இறந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில், சிறுமியின் உடல், தண்ணீரில் கரை ஒதுங்கியது.
விசாரணையில், கடந்த 20ம் தேதி மாயமான சிறுவன் - சிறுமி என்பது உறுதியானது. இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா, அல்லது கொலை செய்யப்பட்டனரா என கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவனின் பெற்றோர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். தாத்தா சீனுவாசன், சிறுவனை வளர்ந்தார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் இருவரும்சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிறுவனின் தாத்தா சீனுவாசன், பேரன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X