பொது செய்தி

தமிழ்நாடு

வெளியூர் பயணம்: போலீஸ் வேண்டுகோள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கம்பம் : வீட்டை பூட்டிவெளியூர் செல்வோர் தகவல் தெரிவித்து செல்ல கம்பம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கம்பத்தில் சமீபமாக திருட்டுகள் அதிகரிப்பால் திருட்டை தடுக்கவும், முன்னெச்சரிக்கையாக கம்பம் தெற்கு போலீசார் அறிக்கை: வெளியூர் செல்பவர்கள் வீட்டை பூட்டி செல்லும் போது, விலைஉயர்ந்த நகை, பணம் வைக்க கூடாது.வெளியூர் செல்வோர் கண்டிப்பாக போலீஸ் ஸ்டேஷன்,டி.எஸ்.பி.

கம்பம் : வீட்டை பூட்டிவெளியூர் செல்வோர் தகவல் தெரிவித்து செல்ல கம்பம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கம்பத்தில் சமீபமாக திருட்டுகள் அதிகரிப்பால் திருட்டை தடுக்கவும், முன்னெச்சரிக்கையாக கம்பம் தெற்கு போலீசார் அறிக்கை: வெளியூர் செல்பவர்கள் வீட்டை பூட்டி செல்லும் போது, விலைஉயர்ந்த நகை, பணம் வைக்க கூடாது.வெளியூர் செல்வோர் கண்டிப்பாக போலீஸ் ஸ்டேஷன்,டி.எஸ்.பி. அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்தலாம்.

குடியிருப்பு பகுதிகளில் சந்தேகப்படும் வகையில் போர்வை, தலையணை விற்பவர்கள், கதவை தட்டி தண்ணீர் கேட்பவர்கள், உதவி கேட்டு வருபவர்கள் மீது சந்தேகம் இருந்தால் தகவல் தர வேண்டும். இரவில் வெளியே விளக்குகள் எரிய வேண்டும். தகவல் தெரிவிக்க தெற்கு ஸ்டேஷனுக்கு 94981 01592, உத்தமபாளையம் டி.எஸ்.பி அலுவலகம் 94981 01573 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X