சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் 66 மாடுகள் மீட்பு

Added : நவ 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெரம்பலுார்:-அரியலுார் அருகே, கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் சிக்கிய 66 மாடுகளை, பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் மீட்டனர். அரியலுார் மாவட்டம், கோடாலிகருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது மாடுகளை, கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் மேய்ப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாக வந்ததால், தங்களது மாடுகளை ஆற்றை கடந்து
 கொள்ளிடம் ஆற்றில் 66 மாடுகள் மீட்பு

பெரம்பலுார்:-அரியலுார் அருகே, கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் சிக்கிய 66 மாடுகளை, பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

அரியலுார் மாவட்டம், கோடாலிகருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது மாடுகளை, கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் மேய்ப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாக வந்ததால், தங்களது மாடுகளை ஆற்றை கடந்து மணல் நடுத்திட்டிற்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர்.
அன்று மாலை, இப்பகுதியில் பெய்த கன மழையால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், 66 மாடுகளை அங்கேயே கட்டி வைத்துவிட்டு ஆற்றில் நீந்தி வீடு திரும்பினர். மாடுகளை அவ்வப்போது மாட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்து வந்தனர்.தொடர்ந்து, இப்பகுதியில் மழை பெய்ததால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, மாடுகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

நேற்று காலை 10:00 மணியளவில், ஜெயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் படகில் திட்டுக்கு சென்றனர். தீயணைப்பு வீரர் ஒருவர், மாடு ஒன்றை பிடித்தவாறு தண்ணீரில் நீந்தி வர, அதைப் பார்த்த மற்ற மாடுகளையும், அவ்வாறே அடுத்தடுத்து பின்தொடர்ந்து தண்ணீரில் நீந்த செய்து, மூன்று மணி நேரம் போராடி, 66 மாடுகளையும் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-நவ-202104:31:42 IST Report Abuse
NicoleThomson இவ்வளவு நாட்டிற்கும் மேய்ச்சல் நிலம் உள்ளதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X