குடிநீர் மேல்நிலை தொட்டி, பூங்கா அமைக்க இடம் ஒதுக்கியும் பணி துவங்காத அவலம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
தேனி : சாக்கடை கழிவுகள் அகற்றததால் சுகாதாரக்கேடு, பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் புதர் மண்டியதால் அச்சம், மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு இடம் தேர்வு செய்தும் பணி துவங்கவில்லை. போலீஸ் ரோந்து இல்லாததால் இரவில் மர்ம நபர்களின் நடமாட்டத்தால் திருட்டு பயம், தெரு நாய்கள் தொந்தரவு'' என பல்வேறு அடிப்படை வசதி இன்றி சிரமப்படுவதாக வீரபாண்டி பேரூராட்சி சாய் நகர் வீட்டு

தேனி : சாக்கடை கழிவுகள் அகற்றததால் சுகாதாரக்கேடு, பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் புதர் மண்டியதால் அச்சம், மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு இடம் தேர்வு செய்தும் பணி துவங்கவில்லை. போலீஸ் ரோந்து இல்லாததால் இரவில் மர்ம நபர்களின் நடமாட்டத்தால் திருட்டு பயம், தெரு நாய்கள் தொந்தரவு'' என பல்வேறு அடிப்படை வசதி இன்றி சிரமப்படுவதாக வீரபாண்டி பேரூராட்சி சாய் நகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குமுறுகின்றனர்.

வீரபாண்டி பேரூராட்சி 5வது வார்டு மெயின் ரோட்டில் இக் குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளது. இங்கு 23 குடியிருப்புக்கள் உள்ளன. நலச்சங்கத்தின் தலைவர் துரைராஜ், செயலாளர் முருகேசன், பொருளாளர் ரகுபதி, உறுப்பினர்கள் ஞானப்பழம், பிரபு, சுரேந்தர் ராம்சிங், மனோகரன் ஆகியோர் கூறியதாவது: ''பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தாமல் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தார்ரோடுகளை தோண்டும் நிலை உள்ளது. சாய் நகர் மெயின் ரோடு முடியும் இடத்தில் 7 சென்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் பணிகளை துவக்காமல் உள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதேபோல் சாய்நகர் மெயின்ரோட்டில் 37 சென்ட் நிலம் நடைபயிற்சிக்கும்,சிறுவர், சிறுமிகள் விளையாட பூங்காவிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பேரூராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்க வில்லை. பூங்காவின் ஒரு பகுதியில் குடியிருப்போர் நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும். மக்கும் மக்காத குப்பை வீடுகளில் வாங்கிச் செல்வது போல், அடிக்கடி கொசு மருந்து தெளிக்க வேண்டும். கொசு தொந்தரவு அதிகம் உள்ளது. சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். இப் பகுதியில் போலீஸ் ரோந்து இல்லாததால் மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் போலீஸ் ரோந்து வருவதற்கு வீரபாண்டி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X