பொது செய்தி

தமிழ்நாடு

வைகை ஆற்றில் நீர் வரத்து; நெல்சாகுபடியில் ஆர்வம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : வைகை ஆற்றின் கரையோர விவசாய நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டி உள்ளனர்.வைகை அணைக்கு உபரியாக வரும் நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் முதலக்கம்பட்டி, குரியம்மாள்புரம், சீரங்காபுரம், அய்யர்கோட்டம், அணைக்கரைப்பட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்களை கடந்து செல்கிறது. வைகை ஆறு செல்லும் வழியோர விவசாய கிணறுகளில்

ஆண்டிபட்டி : வைகை ஆற்றின் கரையோர விவசாய நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டி உள்ளனர்.

வைகை அணைக்கு உபரியாக வரும் நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் முதலக்கம்பட்டி, குரியம்மாள்புரம், சீரங்காபுரம், அய்யர்கோட்டம், அணைக்கரைப்பட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்களை கடந்து செல்கிறது. வைகை ஆறு செல்லும் வழியோர விவசாய கிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து ஆற்றின் கரைப்பகுதி நிலங்களில் நெல் நாற்றாங்கால் பணி தொடர்கிறது. ஏற்கனவே பல ஏக்கரில் நெல் நடவுப்பணிகளும் முடிந்து உள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: வைகை அணையில் நீர் இருப்பு முழு அளவில் இருப்பதால் இன்னும் சில மாதத்திற்கு ஆற்றின் வழியாக நீர் கிடைக்கும். இதனை பயன்படுத்தி தற்போது நடப்படும் நெற்பயிர் மூன்று மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். போதுமான அளவு நீர் இருப்பால் காய்கறிகளை தவிர்த்து நெல் நடவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X