போடி-- -மூணாறு இடையே போக்குவரத்து மீண்டும் துவக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போடி-- -மூணாறு இடையே போக்குவரத்து மீண்டும் துவக்கம்

Added : நவ 24, 2021
Share
போடி : போடிமெட்டு ரோட்டில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றியதையொட்டி போடி -- மூணாறு போக்குவரத்து நேற்று காலை முதல் மீண்டும் துவங்கியது.தமிழகத்திலிருந்து மூணாறு செல்ல போடி-முந்தல் ரோடு 22 கி.மீ., துாரத்தில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் கடல் மட்டத்திலிருந்து 4644 அடி உயரத்தில் போடிமெட்டு மலைச்சாலை அமைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 18 அடி ரோடாக இருந்ததை 24 அடியாக அகலப்படுத்தினர். நேற்று

போடி : போடிமெட்டு ரோட்டில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றியதையொட்டி போடி -- மூணாறு போக்குவரத்து நேற்று காலை முதல் மீண்டும் துவங்கியது.

தமிழகத்திலிருந்து மூணாறு செல்ல போடி-முந்தல் ரோடு 22 கி.மீ., துாரத்தில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் கடல் மட்டத்திலிருந்து 4644 அடி உயரத்தில் போடிமெட்டு மலைச்சாலை அமைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 18 அடி ரோடாக இருந்ததை 24 அடியாக அகலப்படுத்தினர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மழை துவங்கி கனமழையாக இரவு 11:00 வரை நீடித்தது.

இதனால் போடிமெட்டு ரோடு 9 வது கொண்டை ஊசி வளைவு, புலியூத்து மேல் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தது. வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இரவில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் பாறை, மண்சரிவை அகற்றியதையொட்டி, நேற்று காலை முதல் வாகன போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X