சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...: மாவட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மாமனார், மருமகள் பலிகலசப்பாக்கம்: திருவண்ணாமலை அடுத்த ஆடையூரைச் சேர்ந்தவர் மொட்டையன், 55; பழ வியாபாரி. இவரது மருமகள் கல்பனா, 25;சிறுவள்ளூர் அரசு பள்ளியில் தற்காலிக பணியாளர். நேற்று முன்தினம் மாலை, கல்பனா பணி முடிந்து வீடு திரும்பினார்.அவரை மாமனார் மொட்டையன், டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் அழைத்து வந்தார். அருணகிரிமங்கலம் பகுதியில், பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பஸ்

மாமனார், மருமகள் பலி
கலசப்பாக்கம்: திருவண்ணாமலை அடுத்த ஆடையூரைச் சேர்ந்தவர் மொட்டையன், 55; பழ வியாபாரி. இவரது மருமகள் கல்பனா, 25;சிறுவள்ளூர் அரசு பள்ளியில் தற்காலிக பணியாளர். நேற்று முன்தினம் மாலை, கல்பனா பணி முடிந்து வீடு திரும்பினார்.அவரை மாமனார் மொட்டையன், டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் அழைத்து வந்தார். அருணகிரிமங்கலம் பகுதியில், பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பஸ் மோதியது. சம்பவ இடத்தில் கல்பனா இறந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மொட்டையன் இறந்தார்.
புது மணப்பெண் மர்மச்சாவு
ஈரோடு: ஈரோடு மாவட்டம், நன்செய் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். காரைக்குடியில் தேசிய வங்கியில் பணிபுரிகிறார். இவரது மனைவி சவுமியா, 25. கடந்த 11ல் திருமணம் நடந்தது. கடந்த 21ம் தேதி புதுமண தம்பதி, மானுார் கிராமத்தில் உறவினர் வீட்டு விருந்துக்கு சென்று திரும்பினர். நள்ளிரவில் சவுமியாவிற்கு தொடர் இருமல் வந்தது. தண்ணீர் குடித்தபோது மயங்கி விழவே, அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர்கள் பரிசோதனையில், சவுமியா இறந்து விட்டது தெரிந்தது. சவுமியாவின் தந்தை புகார்படி, மொடக்குறிச்சி போலீசார் மற்றும் ஈரோடு ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

புதுமாப்பிள்ளை பலி
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் சீனிவாசலு, 38; இவருக்கும், சென்னையைச் சேர்ந்த கனிமொழி, 32, என்பவருக்கும் கடந்த 21ல் திருமணமானது. மனைவி மற்றும் உறவினர்களுடன் சீனிவாசலு நேற்று முன்தினம் தன் ஹூண்டாய் ஐ 10 காரில், சென்னையில் உள்ள மாமனார் வீட்டுக்கு கிளம்பினார். காரை சீனிவாசலு ஓட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12:10 மணிக்கு, சாலையோரம் நின்ற லாரியின் பின்னால் கார் மோதியது. இடிபாடுகளில் சிக்கிய சீனிவாசலு உயிரிழந்தார். கனிமொழி படுகாயமடைந்தார். உறவினர்கள் மூவர் லேசான காயங்களுடன் தப்பினர்.
காமுக தந்தை கைது
தேனி: கணவரை இழந்த 45 வயது பெண், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில், நர்சாக பணியாற்றுகிறார். இவர், 47 வயது நபரை மறுமணம் செய்தார்.நர்சின் 24 வயது மகள், கணவர் இறந்ததால் தாய் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தங்கினார். நவம்பர் 16ல், நர்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பின், அவர் மகளுக்கு நர்சின் இரண்டாவது கணவர் பாலியல் தொந்தரவு செய்தார். புகாரின்படி, தேனி அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.
பாலியல் டிரைவருக்கு '20 ஆண்டு'

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் சூரியகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராசு, 33; ஆட்டோ டிரைவர்.பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமியை, 2016 மே 29ல் கடத்தி சென்று, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகார்படி திருச்செங்கோடு போலீசார், தங்கராசுவை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. தங்கராசுக்கு, 20 ஆண்டுகள் சிறை, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தாய், மகன் தற்கொலை

திருப்பூர்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்தவர் நாகராஜ், 50; மனைவி ராதா, 45; மகன் நிரஞ்சன், 22; ஐ.டி., பட்டதாரி. இவர்கள், திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் விவேகானந்தர் வீதியில் வசித்து வந்தனர்.நாகராஜ், கடந்தாண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். ராதா பனியன் நிறுவனத்திலும், நிரஞ்சன், வீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக பணியாற்றி வந்தார்.
தாயும், மகனும் வீட்டின் ஒரே அறையில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நிரஞ்சன் கடிதத்தில், 'அப்பா இல்லாத உலகத்தில் வாழ விரும்பவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சாவுடன் வெளிநாட்டு பெண் கைது
வானுார்: புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் அடுத்த கோட்டக்கரை கிராமத்தில் தனியார் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இங்கு, ஆரோவில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். தான்சானியா நாட்டைச் சேர்ந்த சாரா, 32 என்ற பெண் அறையில், 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது.அவருடன், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கிரிஸ் என்பவர் தங்கியிருந்துள்ளார். நண்பர்களான இருவரும், அடிக்கடி கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். சாராவை கைது செய்து, கிரிசை தேடி வருகின்றனர்.
ஒயர் திருடிய இருவர் மின்சாரம் தாக்கி பலி
நாகர்கோவில்: குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் டான் போஸ்கோ, 20; ஜான் கிறிஸ்டோபர், 33. நண்பர்களான இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே, ஆள் இல்லாத பாழடைந்த வீட்டில் ஒயர்களை திருட சென்றுள்ளனர்.

அங்குள்ள ஒயர்களை வெட்டி எடுத்து வந்தவர்கள், அங்கு நின்ற ஸ்டே கம்பியையும் வெட்ட முயற்சித்த போது, அது உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு, மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
வாலிபர் கொலை: இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி, 60; இவரது மருமகன் ஏழுமலை, 37. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று காலை மாமியார் வீட்டிற்கு சென்ற ஏழுமலை, செல்வியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்க முயன்றார். அங்கிருந்த ஏழுமலையின் மச்சான் மற்றொரு ஏழுமலை, 26, மைத்துனர் முத்துராமன், 42, ஆகியோர் மாப்பிள்ளை ஏழுமலையை தாக்கினர். படுகாயமடைந்த அவர் பலியானார். மங்கலம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X