சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைக்கடன் தள்ளுபடி பாரபட்சம்; பொதுமக்கள் ரோடு மறியல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நகைக்கடன் தள்ளுபடியில் அலுவலர்கள் பாரபட்சமாக செயல்படுவதாக மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.இச்சங்கத்தில் 862 பேர் 5 பவுன்தங்க நகைகள்,அதற்கு குறைவாக அடகு வைத்துள்ளனர். தமிழக அரசு 5 பவுன் நகைகளுக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி அறிவித்திருந்தது. நேற்று சங்க நோட்டீஸ் போர்டில் 461 பேர்

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நகைக்கடன் தள்ளுபடியில் அலுவலர்கள் பாரபட்சமாக செயல்படுவதாக மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

இச்சங்கத்தில் 862 பேர் 5 பவுன்தங்க நகைகள்,அதற்கு குறைவாக அடகு வைத்துள்ளனர். தமிழக அரசு 5 பவுன் நகைகளுக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி அறிவித்திருந்தது. நேற்று சங்க நோட்டீஸ் போர்டில் 461 பேர் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியற்றவர்கள் பட்டியல் ஒட்டப்பட்டது. இதில் அலுவலர்கள் பாரபட்சம், கணக்கெடுப்பில் குளறுபடி என அடகு வைத்தவர்கள் பலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேவதானப்பட்டி- வத்தலக்குண்டு ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்க அலுவலர் சாந்தி, தேவதானப்பட்டி எஸ்.ஐ., இந்திரீஸ்கான் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றதால் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X