தமிழ்நாடு

தடுப்பூசி 'டோஸ்' கையிருப்பு 3 லட்சம்! பொதுமக்கள் முன்வர எதிர்பார்ப்பு

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:'திருப்பூர் மாவட்டத்தில் தேவையான தடுப்பூசி இருப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வமாக முன்வர வேண்டும்,' மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 23.44 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், 18 வயதை கடந்த, ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னமும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி
 தடுப்பூசி 'டோஸ்' கையிருப்பு 3 லட்சம்! பொதுமக்கள் முன்வர எதிர்பார்ப்பு

திருப்பூர்:'திருப்பூர் மாவட்டத்தில் தேவையான தடுப்பூசி இருப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வமாக முன்வர வேண்டும்,' மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 23.44 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், 18 வயதை கடந்த, ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னமும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியும், இரண்டாம் தவணை செலுத்தாமல், ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.

இவர்களுக்காக தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தடுப்பூசி கேட்டு தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக கூடுதல் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, பள்ளிகள் தினமும் முகாம் நடக்காமல், மெகா முகாம் மட்டுமே நடத்தப்படுகிறது. மாவட்ட சுகாதாரத்துறை கையிருப்பில் மூன்று லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. எந்த நேரத்திலும் முகாம் நடத்த மருத்துவ குழுவும் தயாராக உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ள மையங்களுக்கு, மக்கள் முன்வர வேண்டும். போதுமான 'டோஸ்' இருப்பில் உள்ளது,' என்றனர்.

மெகா தடுப்பூசி முகாம்தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தலை ஏற்று நடப்பு வாரம், 25ம் தேதி, 11ம் கட்ட தடுப்பூசி முகாமும், 28ம் தேதி, 12வது கட்ட தடுப்பூசி முகாமும் நடத்தப்பட உள்ளது. முகாமுக்கு ஒரு லட்சம் தடுப்பூசி வீதம் இரண்டு முகாமில், இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில், மாவட்ட சுகாதாரத்துறை சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X