19 மணி நேரம் போராட்டம்: போலீசார் தடியடி

Added : நவ 24, 2021
Advertisement
கரூர்:மாரடைப்பால் உயிர் இழந்த கிளீனர் உடலுடன், 19 மணி நேரம் போராட்டம் நடத்தியவர்களை, போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் செல்வமணி, 59; லாரி கிளீனர். இவர் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு கரூர் - ஈரோடு சாலை ஆத்துாரில் உள்ள, பாரத் பெட்ரோலிய நிறுவன வளாகத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.லாரி டிரைவர்கள்,
 19 மணி நேரம் போராட்டம்: போலீசார் தடியடி

கரூர்:மாரடைப்பால் உயிர் இழந்த கிளீனர் உடலுடன், 19 மணி நேரம் போராட்டம் நடத்தியவர்களை, போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் செல்வமணி, 59; லாரி கிளீனர். இவர் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு கரூர் - ஈரோடு சாலை ஆத்துாரில் உள்ள, பாரத் பெட்ரோலிய நிறுவன வளாகத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.லாரி டிரைவர்கள், கிளீனர்கள், 'பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டதால், செல்வமணி உயிரிழந்தார்' எனக் கூறி, உடலை அப்புறப்படுத்த விடாமல் நேற்று காலை வரை, தொடந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் லாரிகள் மூலம், 23 மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட லாரிகள், நீண்ட வரிசையில் நின்றன. ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், ஏ.டி.எஸ்.பி.,க்கள் கண்ணன், ராதாகிருஷ்ணன், டவுன் டி.எஸ்.பி., தேவராஜ் ஆகியோர், டிரைவர், கிளீனர்களிடம் பேச்சு நடத்தினர்.அப்போது, 'ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் செல்வமணி உயிரிழந்தார் என, பாரத் பெட்ரோலிய நிறுவனம் கடிதம் வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இதன்படி, கடிதம் வழங்கப்பட்டது.
செல்வமணி உடலை பரிசோதனைக்கு எடுத்து செல்ல போலீசார் முயன்றனர். ஆனால், செல்வமணியின் தம்பி ராஜேந்திரன், 45, உள்ளிட்ட டிரைவர்கள், கிளீனர்கள் ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜேந்திரனை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதை கண்டித்து, டிரைவர்களும், கிளீனர்களும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
போலீசார் லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். நேற்று மதியம், 12:30 மணிக்கு செல்வமணியின் உடல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, 19 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X