ஆர்ப்பாட்டம் செய்த 28 காங்கிரசார் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம் செய்த 28 காங்கிரசார் கைது

Added : நவ 24, 2021
Share
தேனி : அனுமதி இன்றி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.மாவட்ட காங்கிரஸ் சார்பில், அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் நேற்று மாலை அல்லிநகரம் சாலைபிள்ளையார் கோயில் முன் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன்

தேனி : அனுமதி இன்றி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காங்கிரஸ் சார்பில், அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் நேற்று மாலை அல்லிநகரம் சாலைபிள்ளையார் கோயில் முன் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் சன்னாசி, கருப்பசாமி முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் முனியாண்டி, வட்டாரத் தலைவர் முருகன் உட்பட பங்கேற்றனர். அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X