பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடை திறக்க வேண்டாம்! லட்சுமி நகர் மக்கள் கடும் எதிர்ப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், லட்சுமி நகர் பகுதியில் புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசியல் அமைப்புகள் பேனர் வைத்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனி பகுதி உள்ளது. அண்ணாமலையார் கோவில், வர்த்தக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதி உள்ளது.இப்பகுதியில், 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்க முயற்சி
 மதுக்கடை திறக்க வேண்டாம்! லட்சுமி நகர் மக்கள் கடும் எதிர்ப்பு

திருப்பூர்:திருப்பூர், லட்சுமி நகர் பகுதியில் புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசியல் அமைப்புகள் பேனர் வைத்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனி பகுதி உள்ளது. அண்ணாமலையார் கோவில், வர்த்தக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதி உள்ளது.இப்பகுதியில், 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்க முயற்சி நடக்கிறது. இதையறிந்த அப்பகுதியினர், அங்கு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு அளித்தனர். எம்.பி., சுப்பராயன் மூலம் இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணி, இந்திய கம்யூ., உட்பட கட்சியினர் சார்பில் அப்பகுதியில் பேனர் வைத்தள்ளனர். அப்பகுதியினர் கூறுகையில், 'பொதுமக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இதையும் மீறி கடை திறந்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X